"டெஸ்ட் போட்டியில் பிட்ச் வேறமாதிரி.." - படிக்கல், சாய் சுதர்ஷன், ஜெய்ஸ்வால் குறித்து ரவி சாஸ்திரி எச்சரிக்கை!

உங்களிடம் போட்டிபோடும் அளவு வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர், அவர்களில் எந்த நால்வரைத் தேர்ந்தெடுப்பது என்பது குழப்பமானதாக இருக்கும்.
"Pitches in Test matches are different.." - Ravi Shastri warns Padikkal, Sai Sudharsan, and Jaiswal
"டெஸ்ட் போட்டியில் பிட்ச் வேறமாதிரி.." - படிக்கல், சாய் சுதர்ஷன், ஜெய்ஸ்வால் குறித்து ரவி சாஸ்திரி எச்சரிக்கை!BCCI
Published on: 
Updated on: 
2 min read

நியூசிலாந்தில் டி20 மற்றும் ஒரு நாள் தொடர்களை வென்றுள்ள இந்திய அணி அடுத்ததாக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் குறி வைத்திருக்கிறது. கேப்டன் சுப்மன் கில் உள்ளிட்ட வீரர்கள் இப்போதே அதற்கான தயாரிப்பில் ஈடுபடத் தொடங்கிவிட்டனர்.

கில் மற்றும் கே.எல். ராகுல் டெஸ்ட் போட்டிக்கு தயாராவதற்கான ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்கவில்லை. மறுபக்கம் தேவதத் படிக்கல், சாய் சுதர்ஷன் உள்ளிட்ட வீரர்கள் நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான தயார்படுத்தும் போட்டியில் களம்கண்டு ஃபார்மில் உள்ளனர்.

டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளை வென்று விட்டதனால் டெஸ்டிலும் கிவீஸை இந்தியா டாமினேட் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, அதீத எதிர்பார்ப்புகள் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார். தயார்படுத்தும் போட்டிகளில் இருப்பதை விட முற்றிலும் வேறு மாதிரியான பிட்ச் டெஸ்ட் போட்டியில் இருக்கும் எனக் கூறியிருக்கிறார்.

Jaiswal practice ahead of New Zealand Test
JaiswalBCCI

எனவே நான்கு நாள் ஏ அணியில் விளையாடிய சாய் சுதர்ஷன், படிக்கல் மற்றும் ஜெய்ஸ்வால் கவனமாக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பிளேயிங் 11 பற்றி சொன்னது என்ன?

"தொடக்க ஆட்டக்காரர்களான கே.எல். ராகுல் மற்றும் ஜெய்ஸ்வால் மிகவும் முக்கியமானவர்கள் என்று நான் நினைக்கிறேன். படிக்கல் சிறப்பாக விளையாடி வருகிறார், மேலும் சாய் சுதர்சன் ஒரு தரமான வீரர். ரிஷப் பந்த் உடற்தகுதியுடன் இருந்தால் முதல் டெஸ்டில் விளையாடுவார் என்று நான் நினைக்கிறேன்.

Ravi Sasthri in his coaching Era
Ravi Sasthri BCCI

"பந்துவீச்சைப் பொறுத்தவரையில், நிதிஷ் ரெட்டி தயாராக இருக்கிறார். உங்களிடம் போட்டிபோடும் அளவு வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர், அவர்களில் எந்த நால்வரைத் தேர்ந்தெடுப்பது என்பது குழப்பமானதாக இருக்கும்.

"ஜஸ்பிரித், அன்ஷுல் கம்போஜ், ஹர்ஷித் ராணா, பிரசித் கிருஷ்ணா மற்றும் சிராஜ் ஆகிய ஐந்து பேரில், நான்கு பேர் விளையாடுவார்கள். அவர்களுடன் ரவீந்திர ஜடேஜா அல்லது வாஷிங்டன் சுந்தர் முதன்மை சுழற்பந்து வீச்சாளராக இணைவார்கள். இந்த இருவரில் ஒரு சுழற்பந்து வீச்சாளர் மட்டுமே இருப்பார் என நினைக்கிறேன்." எனக் கூறியுள்ளார்.

இந்திய அணி டெஸ்டிலும் ஆதிக்கம் செலுத்தி மூன்று வகை கிரிக்கெட்டிலும் முடி சூடி நாடு திரும்புமா என்பதைப் பொருத்திருந்து காணலாம்.

"Pitches in Test matches are different.." - Ravi Shastri warns Padikkal, Sai Sudharsan, and Jaiswal
``சாதனைகளும் அதிரடியும் அல்ல.. இதுதான் தோனி!" - கடைசி பந்து வரை தோல்வி முடிவாகாது.. டாப் 10 இன்னிங்ஸ் ஒரு விசிட்!

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.