ரியான் பராக்கின் கருத்தை வெளிப்படையாக மறுத்த சங்கக்காரா! ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் என்ன நடக்கிறது?

இளம் வீரர்கள் மற்றும் அனுபவம் இல்லாத வீரர்களைக் கொண்ட அணி என்பதால் இந்த கருத்து எழுந்ததாக
riyan parag
Published on
Updated on
1 min read

ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராக், தங்கள் அணி பிளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை என்று கூறியிருந்தார். இளம் வீரர்கள் மற்றும் அனுபவம் இல்லாத வீரர்களைக் கொண்ட அணி என்பதால் இந்த கருத்து எழுந்ததாக அவர் தெரிவித்திருந்தார். ஆனால், இந்த கருத்தை அணியின் தலைமைப் பயிற்சியாளர் குமார் சங்கக்காரா முற்றிலும் மறுத்துள்ளார். ராஜஸ்தான் அணி வெறும் அனுபவமற்ற வீரர்களை உருவாக்குவதற்காக மட்டும் உருவாக்கப்படவில்லை என்றும், கோப்பையை வெல்லும் நோக்கத்துடனேயே சிறந்த வீரர்களைத் தேர்வு செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

2022-ம் ஆண்டு முதல் அணியின் அணுகுமுறையை முற்றிலும் மாற்றியதாக சங்கக்காரா விளக்கியுள்ளார். போட்டிகளை வெல்லக்கூடிய திறமை கொண்ட மற்றும் விளையாடுவதற்குத் தயாராக உள்ள வீரர்களைக் கொண்டு அணியை உருவாக்க வேண்டும் என்பதே எங்களது நோக்கம் என்று அவர் தெரிவித்தார். கடந்த சில ஏலங்களில் சில தவறுகள் நடந்திருக்கலாம், ஆனால் ஒவ்வொரு வீரரும் அணியை வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் தான் களமிறக்கப்பட்டனர். அனுபவமின்மை இருந்தாலும், வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பு மட்டுமே அனைவரிடமும் இருந்தது என்று அவர் தெளிவுபடுத்தினார்.

ரியான் பராக்கின் முதல் கேப்டன்சி சீசன் குறித்து பெருமையாகப் பேசிய சங்கக்காரா, களத்தில் அவர் எடுத்த முடிவுகள் சிறப்பாக இருந்ததாகக் பாராட்டினார். கேப்டனாக அவர் இன்னும் பல விஷயங்களைக் கற்றுக்கொள்வார் என்றும், வருங்காலத்தில் அணி இன்னும் வலிமையாகத் திரும்பும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். தொடக்கத்திலிருந்தே பலரும் எங்கள் அணி பிளே-ஆஃப் செல்வதற்கு வாய்ப்பில்லை என்று கருதினர், ஆனால் கடின உழைப்பும், சிறப்பான ஆட்டமும் இருந்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதை ராஜஸ்தான் ராயல்ஸ் நிரூபித்துள்ளது என்று சங்கக்காரா தெரிவித்தார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com