கருத்தில் கமல்ஹாசனை மிஞ்சிய சோயப் அக்தர்.. தோல்விக்கு அவர் சொன்ன விளக்கத்தை கேட்டு ஆடிப்போன சமஸ்தானம்!

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஷோயப் அக்தர் ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் பேசியது மிகவும் வைரலாகியுள்ளது..
கருத்தில் கமல்ஹாசனை மிஞ்சிய சோயப் அக்தர்.. தோல்விக்கு அவர் சொன்ன விளக்கத்தை கேட்டு ஆடிப்போன சமஸ்தானம்!
Published on
Updated on
2 min read

இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரு காலத்தில் கிரிக்கெட்டில் பரம எதிரிகள். ஷோயப் அக்தர், வக்கார் யூனிஸ், வாசிம் அக்ரம் போன்ற பந்துவீச்சாளர்களால் பாகிஸ்தான் அணி ஒரு காலத்தில் அசுர பலம் கொண்டிருந்தது. ஆனால், தற்போது பாகிஸ்தான் அணியின் நிலைமை தலைகீழாக மாறியுள்ளது.

பாகிஸ்தான் அணி ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவிடம் தொடர் தோல்வியைச் சந்தித்தது. இந்தத் தோல்விக்குப் பிறகு, பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஷோயப் அக்தர் ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் பேசியது மிகவும் வைரலாகியுள்ளது.

"நீங்கள் (இந்தியா) கடந்த 10-15 வருடங்களாக எங்களுடன் விளையாடவே இல்லை. ஒரு நாள் போட்டியில் நீங்கள் இன்னமும் எங்களுடன் 'ஹெட் டு ஹெட்' சாதனையில் பின்தங்கியே இருக்கிறீர்கள். வாசிம் அக்ரம் மற்றும் வக்கார் யூனிஸ் உச்சத்தில் இருந்த 90களில் எங்களுடன் நீங்கள் விளையாடியிருக்கலாம். 90களின் நடுப்பகுதியில், ஷாஹித் அப்ரிடியும், நானும் ஏற்கனவே வந்துவிட்டோம். சக்லைன் முஷ்டாக் மற்றும் அப்துல் ரசாக் போன்றவர்களும் இருந்தனர். அப்போது நீங்கள் எங்களுடன் விளையாடவில்லை.

இப்போது நீங்கள் ஒரு பலவீனமான அணியை வீழ்த்தி வருகிறீர்கள். நீங்கள் (இந்தியா) ஒரு நல்ல அணி, ஆனால் நாங்கள் இனி ஒரு நல்ல அணி அல்ல. நாங்கள் ஒரு நல்ல அணியாக இல்லாததால், உலக கிரிக்கெட் பாதிக்கப்படுகிறது. இங்கு சம பலத்துடன் கூடிய போட்டி இல்லை. இது யாருக்கு இழப்பு? இது இந்திய ஊடகங்களுக்கு தான் இழப்பு. எங்களுக்கு அது இழப்பு இல்லை, ஏனென்றால் நாங்கள் அதற்குப் பழகிவிட்டோம். நீங்கள் இனி ஒரு நல்ல பாகிஸ்தான் அணியைப் பார்க்க மாட்டீர்கள், ஏனென்றால் எங்கள் நிர்வாகம் ஒரு நல்ல அணியை உருவாக்க விரும்பவில்லை.

தற்போதைய பாகிஸ்தான் கேப்டனைப் பொறுத்தவரை, அவருக்கு எதுவும் தெரியாது. அவர் எதற்கு கேப்டனாக இருக்கிறார்? அவர் ஏன் மிடில் ஆர்டரில் விளையாடுகிறார்? அவர் அணியின் பலவீனமான வீரராக இருக்கிறார். அவர் விளையாடும் இடத்தில் விளையாட தகுதியானவரா? இதை யாரும் விவாதிக்க மாட்டார்கள். அவர் தான் அணியின் பலவீனமான வீரர்.

அவர் என்ன செய்கிறார் சொல்லுங்கள்? பேட்டிங் ஆட 6வது இடத்தில் வருகிறார், அதே 6வது இடத்தில் இந்தியாவுக்காக விளையாட வரும் வீரர்கள் யார் தெரியுமா? ஹர்திக் பாண்டியா அல்லது திலக் வர்மா. இவர்களோடு பாக்., கேப்டனை ஒப்பிட முடியுமா?" என்று விமர்சித்துள்ளார்.

இந்தியாவும் பாகிஸ்தானும் மோதிய ஆட்டங்கள் குறித்த தகவல்கள்:

1952 முதல் 2025 வரை இந்தியா மற்றும் பாகிஸ்தான் இதுவரை 210 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் இந்தியா 78 போட்டிகளிலும், பாகிஸ்தான் 88 போட்டிகளிலும் வென்றுள்ளது. 38 போட்டிகள் டிரா ஆனது, ஒன்று டை ஆனது, 5 போட்டிகளில் முடிவில்லை.

ஒரு நாள் போட்டிகளில் 136 போட்டிகளில், இந்தியா 58 போட்டிகளிலும், பாகிஸ்தான் 73 போட்டிகளிலும் வென்றுள்ளது. 5 போட்டிகளில் முடிவில்லை.

டி20 போட்டிகளில் இந்தியா 15 போட்டிகளில் 12 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

சமீப காலங்களில், இந்திய அணியின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. இந்தியாவிடம் பாகிஸ்தான் அணி தொடர்ந்து 7 ஆட்டங்களில் தோல்வி அடைந்துள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com