திருவனந்தபுரத்தில் நடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் 15000 ஒருநாள் போட்டி ரன்களைக் கடந்தா விராட் கோலி. கிரக்கெட் வரலாற்றிலேயே 15000 ரன்களை கடந்த வீரர்கள் இரண்டு பேர்தான். ஒன்று சச்சின், மற்றொன்று விராட். விராட் கோலி தனது 303வது இன்னிங்ஸில், சச்சினை விட 74 இன்னிங்ஸ் குறைவாக இந்த சாதனையைப் படைத்துள்ளார். இதன் மூலம் அதிவேகமாக இந்த மைல் கல்லை கடந்த வீரராகவும் உள்ளார்.
நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி, 295 ரன்கள் எடுத்தது. ரோஹித் சர்மா 32 ரன்கள் எடுத்து வெளியேறிய பிறகு களமிறங்கிய விராட் சேசிங்கை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார்.
15000 ரன்கள் என்ற இலக்கைத்தொட 59 ரன்கள் தேவைப்பட்டது, 46 பந்துகளில் அதை எட்டினார். இரண்டு கைகளையும் உயர்த்தி கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.
முதலில் சுப்மன் கில் சதம் அடித்தார். தொடர்ந்து விராட் சதத்தை எட்டினார். கில் விக்கெட் ஆனா பிறக்கும் சிக்சர், ஃபோர் என பறக்கவிட்டார் விராட். குறிப்பாக கடைசி நேரத்தில் அபாரமாக ஆடி, 88 பந்துகளில் 139 ரன்கள் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். கோலியின் கிரிக்கெட் வரலாற்றில் இது 55வது சதம்.
இறுதியில் 41.4 ஓவர்களில் 300 ரன்கள் அடித்து இந்தியா வெற்றி பெற்றது. 37 வயதிலும் தன்னை சேசிங்கின் ஒரே மாஸ்டர் என நிரூபித்துள்ளார் விராட்.
வெஸ்ட் இண்டீஸ் விராட் கோலிக்கு விருப்பமான எதிரணியாக திகழ்கிறது. இந்த ஆட்டத்திற்கு முன்பு, 41 இன்னிங்ஸ்களில் ஒன்பது சதங்கள் மற்றும் 11 அரைசதங்கள் உட்பட 2,261 ரன்கள் எடுத்திருக்கிறார்.
ஒரு நாள் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரராக 18,426 ரன்களுடன் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் நீடிக்கும் நிலையில், அவருக்கு அடுத்தபடியாக 15,000 ரன்களைக் கடந்த ஒரே வீரராக விராட் கோலி திகழ்கிறார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்