சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து அஸ்வின் ஓய்வு

2006-ம் ஆண்டில் நடந்த ரஞ்சி கோப்பையில் தமிழ்நாடு அணியில் முதல் ஆட்டத்தை தொடங்கினார் சென்னையைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின். அந்த போட்டியில் அரியானா அணியின் ஆறு விக்கெட்டுகளை அடுத்தடுத்து பறித்து கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை தன்பக்கம் ஈர்த்தார் அஷ்வின்.
சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து அஸ்வின் ஓய்வு
Published on
Updated on
2 min read

இந்திய கிரிக்கெட் அணியில் சிறந்த பேட்ஸ்மேன் என்ற வரிசையில் கபில்தேவ், சச்சின் டெண்டுல்கர், மகேந்திரசிங் தோனி என இமாலயங்கள் இருந்த நிலையில், பந்து வீச்சைப் பொறுத்தவரை அனில்கும்ளே, கபில்தேவ், ரவிந்திர ஜடேஜா, ஹர்பஜன் சிங் இவர்களின் பட்டியலில் ரவி அஷ்வினின் பெயரும் நிச்சயம் உண்டு.

2009-ம் ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டியே அஷ்வினின் கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத திருப்புமுனையை ஏற்படுத்தியது. பெரிதளவில் அப்போது வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றாலும் கூட, அந்த போட்டியில் 13 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பாராட்டுக்களை பெற்றார் அஸ்வின்.

2010-ல் இந்தியா - இலங்கை இடையே நடந்த சர்வதேச போட்டியில் அஷ்வின் இந்திய அணியில் முதல் முறையாக இடம்பிடித்து வெற்றிச் சரித்தரத்திரத்தை எழுதத் தொடங்கினார். அன்றைய சூழலில் அணியில் இருந்த பந்துவீச்சாளர்களில் அனில் கும்ளே ஓய்வு பெற்றது மற்றும் ஹர்பஜன் சிங்கின் சில சரிவுகள் போன்ற காரணங்கள் அஸ்வினுக்கு அதிக வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தது.

இதைத் தொடர்ந்து ஆசிய கோப்பை உள்ளிட்ட தொடர்களில் பங்கேற்ற அஷ்வின், கிரிக்கெட்டில் நுழைந்த குறுகிய காலத்திலேயே உலகக்கோப்பை போட்டியிலும் பங்கேற்று உலக அரங்கில் இந்திய அணியின் பெருமைக்கு காரணமானார்.

உலகக்கோப்பை போட்டிக்கு பிறகு டெஸ்ட் போட்டியிலேயே கவனத்தை செலுத்தியவர், ஒவ்வொரு வாய்ப்பையும் தவற விடாமல் அதிரடி ஆட்டக்காரராக தன்னை நிரூபித்தார். முதல் டெஸ்ட் தொடரில் 9 விக்கெட்டுகளை வீழ்த்திய அஸ்வினுக்கு ஆட்டநாயகன் விருது கிடைத்தது.

ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மகேந்திரசிங் தோனிக்கு பக்கபலமாக, கேப்டனின் எண்ணவோட்டத்தை சரியே புரிந்து கொண்டு விளையாடுபவராக அஸ்வின் திகழ்ந்தார். அதே நேரம் பந்துவீச்சில் சிறந்தவராக திகழ்வதற்கு தோனிதான் காரணம் என புகழாரமும் சூட்டினார்.

கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பையைம் பயன்படுத்தி உச்சத்தை நோக்கி பயணித்த அஷ்வினுக்கு 2014-ம் ஆண்டு சறுக்கல்களை கொடுத்த ஆண்டாக அமைந்தது. 10 போட்டிகளில் பெஞ்ச் செய்யப்பட்டு பின்னடைவை சந்தித்தவர், கடுமையான பயிற்சியின் மூலம் மீண்டும் முதலில் இருந்து தொடங்கினார்.

Summary

2014 டிசம்பரில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான போட்டியில் 12 விக்கெட்டுகளை வீழ்த்திய அஷ்வின் 2015-ல் நடந்த உலகக்கோப்பையில் இந்திய அணியில் இடம் பெற்றார்.

இந்த போட்டியில் பத்து விக்கெட்டுகளை வீழ்த்தியவர், 2015 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் மட்டும் மொத்தம் 134 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

2016-ல் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக 4 ஆண்டுகள் பார்ம் அவுட் ஆனவர் 2021-ம் ஆண்டு மீண்டும் வந்து புதுசாதனையை தொடங்கினார். 2023-ல் நடந்த இந்தியா - இங்கிலாந்து இடையேயான போட்டியின்போது முதல் மூன்று போட்டிகளில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதன் மூலம் கிரிக்கெட் வரலாற்றில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய அனில்கும்ளேவின் சாதனையை முறியடித்தார் அஷ்வின். தனது ட்ரேடு மார்க்கான சொடுக்கு பந்தின் பிராண்டு அம்பாசிடர் என்றே அறியப்பட்ட அஷ்வின் அனில்கும்ளே உள்ளிட்ட சுழல் பந்து வீச்சாளர்களால் புகழ்மாலை சூட்டப்பெற்றார்.

சமீபத்தில் இந்தியா - பங்களாதேஷ் இடையே நடந்த டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் கனவை நோக்கி முன்னேற செய்தார்.

Summary

தற்போது நடந்து வரும் இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் கவாஸ்ர் டிராபி தொடரின் இரண்டாவது போட்டியோடு சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார் அஷ்வின். இந்திய கிரிக்கெட் அணியில் 14 ஆண்டுகளின் பயணத்தை திடீரென முடிவுக்கு கொண்டு வந்து ரசிகர்களை சோகக்கடலில் தத்தளிக்க வைத்திருக்கிறார் அஷ்வின்.

யார்ரா அந்த பையன் என்ற கேள்விக்கு அணியை தேர்வு செய்யும் தேர்வர்களின் முதல் வீரனாக, நான்தான் அந்த பையன் என அதிரடி ஆட்டத்தால் பதிலளித்து கிரிக்கெட் கரியருக்கே பை பை சொல்லியிருக்கிறார் அஷ்வின்.

மாலைமுரசு செய்திகளுக்காக செய்தியாளர் மணிகண்டன்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com