இந்தியாவின் இளம் கிரிக்கெட் வீரர்களில் பிரபலமானவர் வைபவ் சூர்யவன்ஷி. 15 வயதே ஆகும் இவர், ஒருநாள் விளம்பரப் படப்பிடிப்பில் ரூ.1.5 முதல் ரூ.2 கோடி வரை வருமானம் பெறுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கடந்த ஐபிஎல் சீசனில் விளையாடுவதற்காக தனது 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதாமல் தவிர்த்தார் சூர்யவன்ஷி. போட்டிகளில் அதிரடியாக பேட்டிங் செய்து, சீசனின் MVP ஆகத் தேர்வு செய்யப்பட்டார். அதற்காக பரிசளிக்கப்பட்ட டாடா SUV காரைக்கூட ஓட்டுவதற்கான வயது அவருக்கு வரவில்லை.
ஆனால், அதன்பிறகு வணிக ரீதியிலான அவரது மதிப்பு உச்சத்தை அடைந்துள்ளது. தேர்வைப் புறக்கணித்ததற்கு பண ரீதியில் பலன் கிடைத்ததாக பலரும் மெச்சுகின்றனர். அதேவேளையில், வேகமாக வளர்ந்து வரும் அவரது பிராண்ட் மதிப்புக்கு சட்ட மற்றும் தொழில்முறைப் பாதுகாப்பு உள்ளதா என்ற கேள்வியையும் சிலர் எழுப்புகின்றனர்.
சிறுவன் என்பதால், சூர்யவன்ஷியால் விளம்பரப் பிராண்ட் ஒப்பந்தங்களில் அவரது பாதுகாவலர் இல்லாமல் கையெழுத்திட முடியாது.
இதுவரை சூர்யவன்ஷி, வணிக ரீதியிலான தொடர்புகளை நிர்வகிக்கும் ஏஜென்சிகளுடன் இணைப்பில் இல்லை. அவரது குடும்பத்தினரே அது தொடர்பான முடிவுகளை எடுத்து வருகின்றனர். ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்வாகம் அதற்கான வழிகாட்டுதல்களை வழங்கி வருகிறது.
அடுத்த ஐபிஎல் சீசன் தொடங்குவதற்கு முன்னரே சூர்யவன்ஷி பிராண்ட் ஒப்பந்தங்களைப் பெற்றுள்ளார். கிரிக்கெட்டுக்கு வெளியில் கிடைக்கும் லாபகரமான வணிக வாய்ப்புகள் அவரது திறமையை மறைத்துவிடக் கூடாது என்பதே அனைவரின் கவலையாகவும் உள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்