45 ரன்களில் சுருண்ட இலங்கை.. இந்தியா 'மெகா' வெற்றி! பாகிஸ்தானுடன் ஃபைனல் எப்போது?

டாஸ் வென்ற இலங்கை அணி, முதலில் பந்துவீச முடிவெடுத்தது. இந்திய வீரர்கள் அதிரடியாகத் தொடங்கினாலும், சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர்.
45 ரன்களில் சுருண்ட இலங்கை.. இந்தியா 'மெகா' வெற்றி! பாகிஸ்தானுடன் ஃபைனல் எப்போது?
45 ரன்களில் சுருண்ட இலங்கை.. இந்தியா 'மெகா' வெற்றி! பாகிஸ்தானுடன் ஃபைனல் எப்போது?BCCI
Published on: 
Updated on: 
1 min read

இந்தியா - இலங்கை இடையிலான ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026-ல், கிரிக்கெட் அரையிறுதிப் போட்டி இன்று ஜப்பானில் உள்ள கொரோகி ஸ்போர்ட்ஸ் பார்க்கில் நடைபெற்றது.

இதில் 124 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

ஷ்ரேயாஸ் ஐயர் வழிநடத்திய இந்திய அணியில், வைபவ் சூர்யவன்ஷி, அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், அக்சர் படேல், திலக் வர்மா, வாஷிங்டன் சுந்தர், ஷிவம் துபே, ரவி பிஷ்னோய், ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

டாஸ் வென்ற இலங்கை அணி, முதலில் பந்துவீச முடிவெடுத்தது. இந்திய வீரர்கள் அதிரடியாகத் தொடங்கினாலும், சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர்.

இந்தியா 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது. வைபவ் சூர்யவன்ஷி 21 பந்துகளில் 38 ரன்கள் குவித்து விக்கெட்டை இழந்தார். அதிகபட்சமாக இஷான் கிஷன் 80* ரன்கள் குவித்தார்.

அடுத்து பேட்டிங் செய்த இலங்கை அணி, 9.5 ஓவர்களில் 45 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக நுவனிது ஃபெர்னாண்டோ மட்டுமே இரட்டை இலக்கில் (15) ரன்கள் எடுத்தார்.

6 பேர் பூஜ்ஜியத்தில் விக்கெட்டை இழந்தனர். இந்திய பந்துவீச்சாளர்கள் பும்ரா, அக்சர் படேல், அபிஷேக் சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். வாஷிங்டன் சுந்தர் ஒரு விக்கெட் எடுத்தார். 3 பேர் ரன் அவுட் செய்யப்பட்டனர்.

இலங்கை அணியின் பேட்டிங் மொத்தமாக சொதப்பியதால், 124 ரன்கள் வித்தியாசத்தில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது இந்திய அணி.

அடுத்ததாக, வருகின்ற அக்டோபர் 3ஆம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை சந்திக்கிறது இந்தியா.

முன்னதாக, ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026-ல் தங்கப் பதக்கம் வென்றுள்ளது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி. இதனால், ஆண்கள் அணியும் தங்கம் வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு மிகுந்துள்ளது.

45 ரன்களில் சுருண்ட இலங்கை.. இந்தியா 'மெகா' வெற்றி! பாகிஸ்தானுடன் ஃபைனல் எப்போது?
‘விஸ்வரூபம் எடுத்த இளவரசன்..’ 223 விளாசிய கில்! ஒரே போட்டியில் 5 சதங்கள்... சச்சின், விராட்டுக்கு பின் ரோஹித் செய்த சாதனை!

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com