மாநில அளவிலான பாரா பேட்மிண்டன் போட்டி தொடங்கியது...!

திண்டுக்கல் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான இறகு பந்து (PARA BADMINTON) போட்டி மாநில அளவில் நடைபெறுகிறது.
மாநில அளவிலான பாரா பேட்மிண்டன் போட்டி தொடங்கியது...!
Published on
Updated on
1 min read

திண்டுக்கல் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான இறகு பந்து (PARA BADMINTON) போட்டி மாநில அளவில் நடைபெறுகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான இறகு பந்து போட்டிகள், ஏழாவது ஆண்டாக மாநில அளவில் நடைபெறுகிறது. போட்டிகள் அனைத்தும் திண்டுக்கல் அடுத்துள்ள பிஎஸ்என்ஏ(PSNA) பொறியியல் கல்லூரியில் நடைபெறுகிறது. போட்டிகள் இன்றும் (30.07.2022) நாளையும்(31.07.2022) என 2 நாட்கள் நடைபெறுகிறது.

இதில் தமிழகத்தில் இருந்து திண்டுக்கல், சென்னை, மதுரை, விழுப்புரம், கடலூர், திருச்சி, நெல்லை உட்பட 27 மாவட்டங்களில் இருந்து 90 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொள்கின்றனர். போட்டிகள் அனைத்தும் லீக் முறையில் நடைபெற உள்ளது. ஒற்றையர்பிரிவு, இரட்டையர்பிரிவு, கலப்பு இரட்டையர் பிரிவு என மூன்று பிரிவுகளின்  கீழ் போட்டிகள் நடைபெற உள்ளது. 

இதில் சிறப்பாக விளையாடக்கூடிய வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, தேசிய அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க உள்ளனர். மேலும், போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு  கோப்பை மற்றும் பரிசுகள் வழங்கப்பட உள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com