
ஜிம்பாப்வே சுற்றுப்பயணம்:
ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது. இந்த நிலையில் இரு அணிகளுக்கு இடையே 3வது போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதற்கு முன்பு நடைபெற்ற இரு ஆட்டங்களிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.
மூன்றாவது ஆட்டம்:
இன்று நடைபெற்று வரும் மூன்றாவது ஆட்டத்தில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியில் மூன்றாவதாக களமிறங்கிய சுப்மன் கில் சர்வதேச போட்டிகளில் தனது முதல் சதத்தை பதிவு செய்துள்ளார்.
சாதிக்குமா இந்தியா:
ஏற்கனவே இரண்டு தொடரில் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி மூன்றாவது தொடரிலும் வெற்றி பெற்று ஜிம்பாப்வேவை வாஷ் அவுட் செய்யுமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.