2022  ஐபிஎல் தொடருக்கு புதிய பயிற்சியாளர்களை நியமித்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!!..

ஐபிஎல் 2022 தொடருக்காக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு புதிய பயிற்சியாளர்களை நியமித்துள்ளது.
2022  ஐபிஎல் தொடருக்கு புதிய பயிற்சியாளர்களை நியமித்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!!..
Published on
Updated on
1 min read

அடுத்த ஆண்டுக்கான ஐ. பி. எல் தொடர் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கு விளையாடும் வீரர்கள் ஏலம் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் இந்த வருடம் நடந்து முடிந்த ஐ. பி.எல் தொடரில் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்ட சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி புதிய பயிற்சியாளர்களை அறிவித்துள்ளது. பிரையன் லாராவை பேட்டிங் பயிற்சியாளராகவும், டேல் ஸ்டெயினை வேகப்பந்துவீச்சு பயிற்சியாளராக அணியின் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முத்தையா முரளிதரன் சுழற்பந்து வீச்சு பயிற்சியாளர் மற்றும் உத்தி வகுப்பாளராக தொடர்கிறார். அதே நேரத்தில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹேமங் பதானி பீல்டிங் பயிற்சியாளராக இருப்பார். முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டாம் மூடி அணியின் தலைமைப் பயிற்சியாளராக தனது பணியை தொடர்வார். இவ்வாறு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.சைமன் கேடிச் அசிஸ்டண்ட் கோச் பதவியில் செயலாற்றுவார்கள் அந்த அணி அறிவித்துள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com