16-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடர், 11 நாடுகளில் நடைபெற்று வருகிறது. ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஸ்வீடன் மற்றும் ஸ்லோவாகியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இரண்டாவது பாதியில் ஆட்டத்தின் 77வது நிமிடத்தில் தமக்கு கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை, ஸ்வீடன் வீரர் எமில்ஸ் போர்ஸ் பெர்க் கோலாக்கினார். இறுதியில், ஸ்வீடன் அணி 1 க்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் ஸ்லோவாகியாவை வீழ்த்தியது.