

மார்ச் 28 ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல் 2026 தொடர் வேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இந்த சீசன் தொடக்கம் இன்னும் சரியாக அமையவில்லை. ஏற்கனவே இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ள சிஎஸ்கே, இரண்டிலும் தோல்வியை சந்தித்து பாயிண்ட்ஸ் டேபிளில் 10வது இடத்தில் இருக்கிறது.
கடந்த 2025 சீசனில் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 14 போட்டிகளில் வெறும் 4 வெற்றிகள் மட்டுமே பெற்று முதல் அணியாக வெளியேறிய சிஎஸ்கே, இந்த ஆண்டு வலுவான கம்பேக் கொடுக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், இந்த சீசனின் ஆரம்பத்திலேயே தொடர்ந்து இரண்டு தோல்விகள் அந்த நம்பிக்கையை சற்றே குறைந்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில், இன்று பெங்களூருவின் சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் முக்கிய போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது சிஎஸ்கே. ஆர்சிபிக்கு எதிரான இந்த போட்டி, சிஎஸ்கே தனது முதல் வெற்றியை பதிவு செய்து, மீண்டும் பாதைக்கு திரும்ப வேண்டிய திருமுனையாக இருக்க வேண்டிய போட்டி.
அணியில் பல புதிய மற்றும் இளம் வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளதால் பார்ம் முழுமையாக அமைவில்லையென தெரிகிறது. அதேசமயம், காயத்தால் வெளியே இருக்கும் முக்கிய வீரர்கள் அணிக்கு திரும்பும் வரை சிஎஸ்கே தனது சரியான அணிக் கூட்டணியை அமைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. மேலும், அணித் தேர்வு மற்றும் கேப்டன்சி குறித்து ரசிகர்கள் இடையே விமர்சனங்களும் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, சில போட்டிகளில் செய்யப்பட்ட மாற்றங்கள்,சிலரை பயன்படுத்தாமல் இருப்பது போன்ற அணியின் முடிவுகள் ரசிகர்களிடையே கேள்விகளை எழுப்பியுள்ளன. கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டின் கேப்டன்சியும் பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. இன்றைய போட்டியில் இந்த தவறுகளை சரி செய்து, தன்னம்பிக்கையுடன் விளையாடினால் சிஎஸ்கேக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது. அதேவேளையில், ஆர்சிபி அணியும் சொந்த மண்ணில் விளையாடுவதால் கடினமான சவாலாக இருக்கும். இன்றைய போட்டியில், சிஎஸ்கே சீசனின் திருப்புமுனையாக மாறுமா என்பதை காத்திருக்க வேண்டியது தான்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.