இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் இன்று இரவு நடைபெறுகிறது.
இந்தியா - இங்கிலாந்து இடையே இன்று 2வது டி20 போட்டி:
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. ஏற்கனவே நடந்து முடிந்த முதலாவது டி 20 போட்டியில், இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
விராட்கோலி, பும்ரா, ரவீந்திர ஜடேஜா, ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பண்ட் ஆகியோர் ஆட்டத்தில் பங்கேற்பார்களா?:
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டி20 போட்டி பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. முதல் போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்டிருந்த விராட்கோலி, பும்ரா, ரவீந்திர ஜடேஜா, ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பண்ட் ஆகியோர் இன்றைய ஆட்டத்தில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய ஆட்டத்தில் தொடரை வெல்லுமா இந்தியா:
இந்திய நேரப்படி, இரவு 7 மணிக்கு தொடங்கும் இப்போட்டியில், வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றும் முனைப்பில், இந்திய அணி உள்ளது. அதேசமயம் முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பழிதீர்க்கும் வேகத்தில் இங்கிலாந்து அணி களமிறங்கும் என்பதால் ஆட்டத்தில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.