
ஆசிய கோப்பை டி -20 போட்டிகளுக்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொடரில் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம், ஆகிய நாடுகளும், பி பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய நாடுகளும் பங்கேற்கின்றன. இந்தியாவிற்கான முதல் போட்டி செப்.10 துவங்குகிறது. இந்த போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்தை இந்தியா எதிர்கொள்கிறது.
பேட்டர்ஸ் : சூர்யகுமார் யாதவ் (கேபட்டன்), திலக் வர்மா, அபிஷேக் சர்மா, ஷுப்மன் கில்
விக்கெட் கீப்பர்கள் : சஞ்சு சாம்சன், ஜிதேஷ் சர்மா
ஆல்-ரவுண்டர்கள் : ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், சிவம் துபே
சுழற்பந்து வீச்சாளர்கள் : குல்தீப் யாதவ், வருண் சகரவர்த்தி
வேகப்பந்து வீச்சாளர்கள் : ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, ரிங்கு சிங்
இந்திய அணியில் ஷ்ரேயாஸ் ஐயர், யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை நடந்த ஆசிய கோப்பை டி 20 தொடரில் இந்தியா 8 முறை வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.