"உலகக்கோப்பை ஹாக்கி".. இந்தியா - இங்கிலாந்து இன்று மோதல்

"உலகக்கோப்பை ஹாக்கி".. இந்தியா - இங்கிலாந்து இன்று மோதல்
டவர் உலகக்கோப்பை ஹாக்கி தொடரில், பலம் வாய்ந்த இங்கிலாந்து அணியை இந்திய அணி இன்று எதிர்கொள்கிறது.
15-வது உலகக் கோப்பை ஆக்கி திருவிழா ஒடிசாவின் ரூர்கேலா மற்றும் புவனேஸ்வர் ஆகிய நகரங்களில் நடைபெற்று வருகிறது. தொடரின் முதல் போட்டியில் ஸ்பெயின் அணியை இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது.
இந்த நிலையில், தனது இரண்டாவது லீக் போட்டியில் பலம் வாய்ந்த இங்கிலாந்து அணியை இந்தியா இன்று எதிர்கொள்கிறது. இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் காலிறுதி வாய்ப்பை மேலும் பலப்படுத்தும். இதனால், இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com