பதக்கம் பெறும்போது முகக்கவசத்தை கழற்றலாம்... ஒலிம்பிக் மைதானத்தில் புதிய விதிமுறை...

ஒலிம்பிக்கில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்கள் பதக்கம் பெறும் போது புகைப்படத்திற்காக 30 நொடிகள் மட்டும் முகக்கவசத்தை கழட்டலாம் என புதிய விதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பதக்கம் பெறும்போது முகக்கவசத்தை கழற்றலாம்... ஒலிம்பிக் மைதானத்தில் புதிய விதிமுறை...
Published on
Updated on
1 min read
2020 ஆம் ஆண்டில் திட்டமிடப்பட்ட டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள், கொரோனா பாதிப்பால், ஓராண்டு ஒத்திவைக்கப்பட்டு கடந்த 23-ல் கோலாகலமாக துவங்கியது. இருப்பினும் ஒலிம்பிக் போட்டிகளால் தங்கள் நாட்டில் கோவிட் நிலைமை மோசமாகும் என ஜப்பானியர்கள் பலர் அஞ்சுகின்றனர். ஒலிம்பிக் போட்டிகளுக்கு எதிராக போராட்டம் வாயிலாக தங்களின் எதிர்ப்பையும் பதிவு செய்துள்ளனர். அதனால் ஒலிம்பிக் தீப ஓட்டம் போன்றவற்றை காணொளி காட்சி நிகழ்ச்சிகளாக போட்டிக் குழு மாற்றியது . தற்போதைய போட்டிகளும் பெரும்பாலும் பார்வையாளர்களின்றி நடத்தப்படுகிறது.
இந்நிலையில் தற்போது முகக்கவசம் அணிவது பற்றிய புதிய விதியை கொண்டு வந்துள்ளனர். அதன்படி விளையாட்டு வீரர்கள், ஊழியர்கள், ஊடகவியலாளர்கள், விளையாட்டு ஒருங்கிணைப்பாளர்கள் என அனைவரும் விளையாட்டு நடைபெறும் இடத்திலும் சரி, வெளியேயும் சரி முக்கவசத்தை கழட்டக்கூடாது என கண்டிப்பாக கூறியுள்ளனர். விளையாட்டு வீரர்கள் தங்கள் போட்டிகளின் போது மட்டும் முகக்கவசம் அணிவதில் விலக்கு உண்டு. மற்றபடி பதக்கம் வாங்கும் போது கூட முக்கவசம் கட்டாயம் என கூறியுள்ளனர். புகைப்படத்திற்காக மட்டும் 30 நொடிகள் கழட்ட அனுமதித்துள்ளனர்.
logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com