இந்தியாவுக்காக உலக கோப்பையை வெல்வதே அடுத்த இலக்கு - ஹர்திக் பாண்டியா

இந்தியாவுக்காக உலக கோப்பையை வெல்வதே அடுத்த இலக்கு - ஹர்திக் பாண்டியா
Published on
Updated on
1 min read

இந்தியாவுக்காக உலக கோப்பையை வெல்வதே தனது அடுத்த இலக்கு என இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.

குஜராத் - ராஜஸ்தான் அணிகள் மோதிய ஐபிஎல் தொடரின் இறுதி போட்டி நேற்று அகமதாபாத்தில் நடைபெற்றது.

இதில் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணி நிர்ணயித்த ஓவர்களில் 133 ரன்களை எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது.

இந்தநிலையில் வெற்றி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த  பாண்டியா, அறிமுகப்படுத்தப்பட்ட முதல் ஆண்டிலேயே சாம்பியன் பட்டம் வென்ற அணி என்ற பயணத்தைத் குஜராத் அணி தொடங்கியுள்ளதாக குறிப்பிட்டார்.

மேலும் பேட்டிங் எப்போதும் என் இதயத்திற்கு நெருக்கமான ஒன்று என கூறிய அவர்,  5 ஐபிஎல் வெற்றியை தொடர்ந்து, இந்தியாவுக்காக உலக கோப்பையை வெல்வதே தனது இலக்கு என கூறியுள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com