உலகக் கோப்பை கால்பந்து 2022 வெற்றியைக் கணித்த சூப்பர் கம்பியூட்டர்...கணிப்பு நிஜமாகுமா?!!

உலகக் கோப்பை கால்பந்து 2022  வெற்றியைக் கணித்த சூப்பர் கம்பியூட்டர்...கணிப்பு நிஜமாகுமா?!!

உலகக் கோப்பை கால்பந்து தொடர் வரும் நவம்பர் மாதம் 20-ம் தேதி கத்தாரில் தொடங்கவிருக்கிறது.  டிசம்பர் 18ஆம் தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டியில் 32 அணிகள் பங்கேற்கின்றன. 1930ல் தொடங்கிய உலகக் கோப்பை கால்பந்து  போட்டியின் 22வது பதிப்பாகும். 

உலகின் தலைசிறந்த கால்பந்தாட்ட வீரர்களான அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸி மற்றும் போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோர்  உலகக் கோப்பையின் இறுதி ஆட்டத்தில் மோதுவார்கள் எனக் கணித்துள்ளது சூப்பர் க்ம்பியூட்டர்.  இதுவரை இருவராலும் அவர்கள் அணியை ஒரு முறை கூட சாம்பியனாக்க முடியவில்லை.  இந்த முறை அனைவரின் பார்வையும் இருவர் மீது மட்டுமே இருக்கும்.

போட்டி தொடங்குவதற்கு 24 நாட்களுக்கு முன்பு, உலகக் கோப்பை கால்பந்து போட்டி குறித்து சூப்பர் கம்ப்யூட்டர் ஒரு பெரிய கணிப்பை செய்து மக்களிடையே பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இதன்படி இம்முறை இறுதிப் போட்டி அர்ஜென்டினா அணித்தலைவர் லியோனல் மெஸ்ஸி மற்றும் போர்ச்சுகல் அணித்தலைவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ இடையே இருக்கும் எனக் கணித்துள்ளது.  இப்போட்டியில் அர்ஜென்டினா அணி போர்ச்சுகலை தோற்கடித்து சாம்பியன் ஆகும் எனவும் அது அதன் கணிப்பை கூறியுள்ளது.  இதில் வெற்றி பெற்றால் மெஸ்ஸி அவரது வாழ்நாளின் கடைசி உலகக் கோப்பையில் முதல் முறையாக சாம்பியனாவார்.

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com