ஜிம்பாபே அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி..!!!

ஜிம்பாபே அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி..!!!
Published on
Updated on
1 min read

2022 ஆம் ஆண்டு உலக கோப்பை போட்டி விறுவிறுப்பாக  நடைபெற்று வரும் நிலையில், super 12 போட்டியில் இந்தியா vs ஜிம்பாப்வே அணிகள் இன்று மோதின..

முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மா மற்றும் கே.எல். ராகுல் களமிறங்கினர். ரோஹித் சர்மா 15 ரன்கள் ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய சூர்யா குமார் யாதவ் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 25 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். தொடர்ந்து களமிறங்கிய ஆட்ட காரர்கள் சிறப்பாக விளையாடி 186 ரன்கள் எடுத்தனர்.

ஜிம்பாப்வே அணி 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கினர்.. தொடர்ந்து அடுத்தடுத்து விக்கெட்களை இழந்த ஜிம்பாப்வே வீரர்கள் 115 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இதனால் இந்திய அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதை தொடர்ந்து, அரையிறுதி போட்டியில் இந்தியா vs இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com