“இன்று நடக்குமா இந்தியா - பாகிஸ்தான் போட்டி” - சிந்தூர் தாக்குதலுக்கு பிறகு முதல் முறை மோதிக்கொள்ளும் அணிகள்.. வலுக்கும் எதிர்ப்புகள்!

இந்த போட்டியானது கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது..
“இன்று நடக்குமா இந்தியா - பாகிஸ்தான் போட்டி” -  சிந்தூர் தாக்குதலுக்கு பிறகு முதல் முறை மோதிக்கொள்ளும் அணிகள்.. வலுக்கும் எதிர்ப்புகள்!
Published on
Updated on
1 min read

பதினேழாவது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது இதில் போட்டியிடும் எட்டு அணிகளும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது “A” பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரக அணிகள் மற்றும் “B” பிரிவில் இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் அணிகளும் உள்ளன. ஒவ்வொரு அணிகளும் தங்கள் பிரிவில் உள்ள அணிகளுடன் ஒரு முறையாவது மோதவேண்டும். பின்னர் இறுதியில் இரு பிரிவிலும் டாப் 2 இடத்தை பிடித்த அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெரும்.

எனவே “A” பிரிவில் உள்ள இந்தியா, பாகிஸ்தான் அணிகள் ஒருமுறையாவது மொத வேண்டும் அதன்படி இன்று துபாயில் இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற உள்ளது. சமீபத்தில் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் அதனை எதிர்த்து இந்தியா, பாகிஸ்தான் மீது சிந்தூர் தாக்குதலை நடத்தி பதிலடி கொடுத்தது. இதன் காரணமாக இரண்டு நாடுகளின் உறவுகளுக்கு இடையே விரிசல் ஏற்பட்டது. இந்த பிரச்சனைகளுக்கு பிறகு இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதுவது இதுவே முதல் முறையாகும்.

வழக்கமாகவே கிரிக்கெட் ரசிகர்களுக்கு இந்தியா பாகிஸ்தான் அணியின் போட்டி என்றால் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும். ஆனால் இந்த போட்டியானது கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நெட்டிசன்கள் சிலர் இந்தியா அணி பாகிஸ்தான் அணியுடன் மோத கூடாது என எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இருப்பினும் பல நாடுகள் பங்கு பெரும் சர்வதேச போட்டிகளில் இந்திய அணி பங்கு பெற மத்திய அரசு அனுமதி அளித்த நிலையில் இன்று துபாயில் 6 வது லீக் ஆட்டத்தில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொள்கின்றன.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com