விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. உலகின் முதல்நிலை வீரரும், 19 கிராண்ட்சிலாம் பட்டம் வென்றவருமான ஜோகோவிச் (செர்பியா) 3-வது சுற்றில் அமெரிக்காவை சேர்ந்த டெனிஸ் குட்லாவை எதிர்கொண்டார். இதில் ஜோகோவிச் 6-4, 6-3, 7-6 (9-7) என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.