சிஎஸ்கே வீரரின் தாயார் காலமானார்.. நேரில் சென்று ஆறுதல் சொன்ன தோனி! நெகிழ வைக்கும் பின்னணி!

இக்கட்டான நேரத்தில் முகேஷ் சௌத்ரிக்கு சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி மிகப்பெரிய ஊன்றுகோலாக இருந்துள்ளார்.
வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் சௌத்ரியின் சிகிச்சை பலனின்றி காலமானார்
வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் சௌத்ரியின் சிகிச்சை பலனின்றி காலமானார்வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் சௌத்ரியின் சிகிச்சை பலனின்றி காலமானார்
Published on
Updated on
2 min read

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் சௌத்ரியின் தாயார் பிரேம் தேவி, கடந்த ஒரு வருடமாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை சிகிச்சை பலனின்றி காலமானார். மும்பையில் உள்ள டாடா மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அங்கேயே அவரது உயிர் பிரிந்தது. இந்தச் சோகமான செய்தியைத் தொடர்ந்து, கடந்த சனிக்கிழமை ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டி முடிந்த கையோடு முகேஷ் சௌத்ரி தனது சொந்த ஊரான ராஜஸ்தான் மாநிலம் பில்வாராவிற்கு விரைந்தார். அங்கு தனது அண்ணன் டாக்டர் ராஜேஷ் சௌத்ரியுடன் இணைந்து தனது தாயாரின் இறுதிச் சடங்குகளை செய்து முடித்தார்.

இந்த இக்கட்டான நேரத்தில் முகேஷ் சௌத்ரிக்கு சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி மிகப்பெரிய ஊன்றுகோலாக இருந்துள்ளார். முகேஷ் சௌத்ரியின் தாயார் மருத்துவமனையில் இருந்தபோது, தோனி தொடர்ந்து முகேஷுடன் தொடர்பில் இருந்து அவருக்குத் தேவையான மன தைரியத்தைக் கொடுத்துள்ளார். அதுமட்டுமின்றி, மருத்துவமனைக்கே நேரில் சென்று முகேஷின் தாயாரைச் சந்தித்து ஆறுதல் கூறியது இப்போது ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது. இந்த சீசனில் இதுவரை ஒரே ஒரு போட்டியில் மட்டுமே விளையாடியுள்ள முகேஷ், இன்றைய மும்பை இந்தியன்ஸ் போட்டிக்கு முன்னதாக அணியுடன் இணைவார் அல்லது பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான அடுத்த போட்டியில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தோனியைப் பொறுத்தவரை, அவரும் இந்த சீசனில் தசைநார் காயம் (Calf Strain) காரணமாக இன்னும் ஒரு போட்டியில் கூட விளையாடாமல் தவித்து வருகிறார். இருப்பினும், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டிக்கு முன்னதாக அவர் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டது ரசிகர்களுக்குப் பெரும் நம்பிக்கையை அளித்துள்ளது. செவ்வாய்க்கிழமை நடந்த பயிற்சியில் விக்கெட் கீப்பிங் மற்றும் பேட்டிங் இரண்டிலும் தோனி முழு கவனத்துடன் ஈடுபட்டார். புதன்கிழமை பயிற்சியின் போது வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொண்ட தோனி, சில சிக்ஸர்களைப் பறக்கவிட்டு தனது பழைய ஃபார்மை நிரூபித்தார். இருப்பினும் சில பந்துகளை அடிக்க முடியாமல் அவர் திணறியதும் தெரிந்தது.

தோனி இன்று விளையாடுவது குறித்து சிஎஸ்கே பந்துவீச்சு பயிற்சியாளர் எரிக் சிம்மன்ஸ் கூறுகையில், தோனி மற்றும் மருத்துவக் குழுவினர் 100 சதவீதம் திருப்தியாக இருந்தால் மட்டுமே அவர் இன்று களமிறங்குவார் என்று தெரிவித்துள்ளார். பயிற்சிக்கு நடுவே சில கலகலப்பான தருணங்களும் அரங்கேறின. எப்போதும் நாய்கள் மீது அதிக அன்பு கொண்ட தோனி, மைதானத்தில் இருந்த ஏஐ (AI) தொழில்நுட்பத்தில் இயங்கும் ஐபிஎல் ரோபோ நாயுடன் விளையாடி மகிழ்ந்தார். அந்த ரோபோ நாய் தன்னைப் போலவே சில செய்கைகளைச் செய்யுமாறு தோனி சைகை காட்டி விளையாடிய வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com