எவரெஸ்ட் சிகரம் செல்ல நிதியுதவி செய்த உதயநிதி... 

எவரெஸ்ட் சிகரம் செல்ல நிதியுதவி செய்த உதயநிதி... 

உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தின் உச்சத்திற்கு சென்று சாதனை படைக்க இரு்ககும் தமிழக பெண் என். முத்துச்செல்விக்கு இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத்துறை  அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் ரூபாய் 10 லட்சம் காசோலையை  நிதியுதவியாக  வழங்கியுள்ளா். 

சென்னையை சோ்ந்த என் முத்து செல்வி உலகிலேயே மிகவும் உயரமான 8,848 மீட்டா் கொண்ட எவரெஸ்ட் சிகரத்துக்கு செல்ல ஏசியன் டிராக்கிங் இன்ட்டா் நேஷனல் நிறுவனம் மூலம் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா். இதனை அடுத்து அவா் நேபாளத்தின் தலைநகா் காத்மண்டுவில் இருந்து  புறப்படுவதாக செய்திகள் தொிவிக்கின்றன.

பள்ளி நாட்களில் தடகள விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்ட என். முத்து செல்வி கடந்த 2021-ஆம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடந்த மகளிா் தின விளையாட்டு போட்டியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மலைப்பட்டு மலையில் 155 அடி உயரத்தில் இருந்து  கண்ணைக் கட்டிக்கொண்டு கீழே இறங்கினாா்.மேலும் இது போன்று  பல சாதனைக்கு சொந்தக்காரா் அவா்.

இந்நிலையில்  என். முத்து செல்வி   நேபாள அரசின் ஒத்துழைப்புடன் செல்லும் இந்த பயணத்துக்கு  நிதியுதவி வேண்டி  கேரிக்கை விடுத்திருந்தாா்.இந்த  கேரிக்கையை ஏற்று  இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் ரூபாய் 10 லட்சம் காசோலையை  நிதியுதவி வழங்கியுள்ளாா்.

-முருகானந்தம்

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com