சச்சினின் சாதனையை சொந்த மண்ணில் சமன் செய்த விராட் கோலி....

சச்சினின் சாதனையை சொந்த மண்ணில் சமன் செய்த விராட் கோலி....
Published on
Updated on
1 min read

சொந்த மண்ணில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட்டில் 20 சதங்களை அடித்து அசத்தியிருக்கும் விராட் கோலி, கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினின் சாதனையை சமன் செய்திருக்கிறார்....

கிரிக்கெட் ஜாம்பவான் என அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர், சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 49 சதங்களையும், டெஸ்ட் போட்டியில் 51 சதங்களையும் அடித்து, சர்வதேச அரங்கில் 100 சதங்களை அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார்.  2012-ஆம் ஆண்டு மார்ச் 16-ஆம் தேதி நடைபெற்ற வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் சச்சின் தனது 49-வது சதத்தை அடித்ததன் மூலம் இந்த சாதனையை படைத்தார்.

தற்போது விராட் கோலி சர்வதேச அரங்கில், சச்சினின் பல சாதனைகளை நெருங்கி வருகிறார்.  மிக குறைந்த வயதில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 12 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற பெருமையை பெற்றிருக்கும் விராட் கோலி, ஒருநாள் கிரிக்கெட்டில் 45 சதங்களை அடித்துள்ளார்.  சச்சின் 49 சதங்கள் அடித்த நிலையில், சச்சினின் இந்த சாதனையை சமன் செய்ய கோலிக்கு இன்னும் நான்கு சதங்கள் மட்டுமே உள்ளது.

அதுமட்டுமல்லாமல், இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சின் 8 சதங்கள் அடித்துள்ள நிலையில், விராட் கோலி தற்போது 9 சதங்கள் அடித்து அவரது சாதனையை முறியடித்துள்ளார்.  மார்ச் 2019 -க்குப் பிறகு கோலி சதம் அடித்திருப்பதால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

சொந்த மண்ணில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட்டில் 20 சதங்களை அடித்து அசத்தியிருக்கும் விராட் கோலி, கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினின் சாதனையை சமன் செய்திருக்கிறார்.  இந்த சாதனைக்கு சச்சின் 160 இன்னிங்ஸ் எடுத்துக் கொண்ட நிலையில், விராட் கோலி வெறும் 99 இன்னிங்சில் இந்த சாதனையை எட்டியிருக்கிறார்.

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com