டெஸ்ட் போட்டியில் கேப்டனாக விராட் கோலியின் 10-வது டக் அவுட் இதுவாகும். இதன் மூலம் அதிக முறை, கேப்டனாக விளையாடி டக் அவுட் ஆனவர்கள் வரிசையில் இரண்டாவது இடத்தில் கோலி உள்ளார். நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீபன் பிளமிங் 13 முறை டக் அவுட் ஆகி முதல் இடத்தில உள்ளார். இதற்கு அடுத்ததாக தென்னாப்பிரிக்காவில் முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித் 10 முறை டக் அவுட் ஆகியுள்ளார். தற்போது அவருடன் கோலி கைகோர்த்துள்ளார்.