நொடியில் மாறிய 'வரலாறு!' 42 ஆண்டுகள் அசைக்க முடியாத ரெக்கார்டை உடைத்த தமிழ் பெண் - வித்யாவின் பின்னணி தெரியுமா?

குடும்ப பாரத்தை குறைக்க எடுத்த ஒரு முடிவு, அவர்களது விளையாட்டுப் பயணத்தில் முக்கிய தொடக்கமாக அமைந்தது.
Vidhya Ramraj won bronze in Asia Games 2026
'நொடிகளில் மாறிய வரலாறு' பி.டி. உஷாவின் 42 வருட ரெக்கார்டை உடைத்த தமிழக வீராங்கனை... யார் இந்த வித்யா?
Published on: 
Updated on: 
2 min read

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026-ல், மகளிர் 400 மீட்டர் தடை ஓட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை வென்றார் வித்யா ராம்ராஜ். அவர் 54.75 வினாடிகளில் பந்தயத்தை முடித்து தேசிய அளவில் புதிய சாதனை படைத்துள்ளார்.

இதன் மூலம், 1984 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் பி.டி. உஷா படைத்த, 42 ஆண்டுகளாக யாராலும் தாண்ட முடியாத 55.42 வினாடிகள் என்ற சாதனையை முறியடித்திருக்கிறார்.

ஜஸ்ட் மிஸ்ஸான தங்க பதக்கம்

வித்யா, கடந்த 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற ஹாங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், பி.டி. உஷாவின் சாதனையை சமன் செய்து வெண்கலப் பதக்கத்தை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த முறை இந்திய வரலாற்றில் சிறந்த ஓட்டத்தை வெளிப்படுத்தியிருந்தாலும், நூழிலையில் தங்கப் பதக்கத்தைத் தவறவிட்டார்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் மரியம் கரீம் 54.31 வினாடிகளில் ஓட்டத்தை முடித்து தங்கப் பதக்கம் பெற்றார். கஜகஸ்தானின் அடெலினா ஜெம்ஸ் 54.58 வினாடிகளில் பந்தயத்தை முடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

கோவை டு பாரிஸ்.. யார் இந்த வித்யா?

பி.டி. உஷாவின் சாதனையை முறியடித்த இதயத் தமிழ்ப் பெண்ணான வித்யா, கோவையைச் சேர்ந்தவர். இவரது பெற்றோர் எளிய பின்னணியைச் சேர்ந்தவர்கள். வித்யாவையும் அவரது இரட்டைச் சகோதரியான நித்யாவையும் ஈரோட்டில் உள்ள ஒரு விளையாட்டு விடுதியில் தங்கவைத்து, படிக்க வைத்தனர். குடும்ப பாரத்தை குறைக்க எடுத்த இந்த முடிவு, அவர்களது விளையாட்டுப் பயணத்தில் முக்கிய தொடக்கமாக அமைந்தது.

வித்யா தடகள விளையாட்டில் சிறந்து விளங்கினார். விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் வணிக நிர்வாகம் படித்தார். 2018-ஆம் ஆண்டு பாட்டியாலாவில் உள்ள தேசிய தடகள முகாமில் சேர்ந்தார்.

தடைகளை தாண்டிய தடகள வீராங்கனை

பாட்டியாலாவில் புதிய மொழியைக் கற்றுக்கொள்வது அவருக்குச் சவாலாக இருந்தது. புதிய சூழலால் உடல்நலப் பிரச்சினைகளையும் எதிர்கொண்டார். குடல்வால் அறுவைச் சிகிச்சையும் செய்துகொண்டார். இதனால் ஒலிம்பிக் தகுதிச் சுற்றுப் போட்டிகளுக்கான அவரது தயாரிப்புகள் பாதிக்கப்பட்டன.

பெற்றோர் சாதாரண வேலைக்குச் செல்லுமாறு அழுத்தம் கொடுக்கத் தொடங்கினர். ஆனாலும், தனது முடிவில் பிடிவாதமாக இருந்தார் வித்யா.

கோச் செய்த மாற்றம்.. உருவான வரலாறு!

பயிற்சியாளர் நேபால் சிங் ரத்தோரிடம் பயிற்சி பெறுவதற்காக தனது சகோதரியுடன் சென்னைக்கு குடிபெயர்ந்தார். அதுவரை ஓட்டப் பந்தயங்களில் கவனம் செலுத்தி வந்த வித்யாவை, நேபால் சிங் தடை தாண்டி ஓடும் போட்டியில் ஈடுபட ஊக்குவித்தார்.

இந்த வியூக மாற்றம், 2023-ல் நடைபெற்ற 2022 ஹாங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் அற்புதத்தை நிகழ்த்தியது. 400 மீட்டர் தடை ஓட்டத்தில் பி.டி. உஷாவின் நீண்டகால இந்திய சாதனையான 55.42 வினாடிகளை சமன் செய்ததன் மூலம், வித்யாவை நாடே திரும்பிப் பார்த்தது.

அந்த ஆண்டு, அவர் தனிநபர் போட்டியில் வெண்கலப் பதக்கத்தையும், கலப்பு தொடர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றதுடன், நித்யாவுடன் இணைந்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய முதல் இரட்டையர்கள் என்ற வரலாற்றுச் சாதனையையும் படைத்தார்.

அதைத் தொடர்ந்து, 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் கலந்துகொண்டார். இப்போது, 42 ஆண்டுகால சாதனையை முறியடித்து புதிய வரலாறு படைத்துள்ளார்.

Vidhya Ramraj won bronze in Asia Games 2026
ரயில் இருக்கைக்கு அடியில் தூங்கிய சிறுவன்... இன்று ஆசிய விளையாட்டில் தங்கம் வென்ற ஹீரோ!

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com