"எங்கள் வெற்றியை அனுபவிக்க முடியவில்லை.." - விராட், அனுஷ்கா குறித்து ஸ்ரீராம் நெனே சொன்னது என்ன?

நடிகை மாதுரி தீட்சித்தின் கணவர் டாக்டர் ஸ்ரீராம் நெனே, விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மாவுடனான தனது உரையாடல் குறித்துப் பகிர்ந்துள்ள தகவல்கள் இணையத்தில் பரவி வருகின்றன.
விராட் - அனுஷ்கா குறித்து ஸ்ரீராம் நெனே சொன்னது என்ன?
விராட் - அனுஷ்கா குறித்து ஸ்ரீராம் நெனே சொன்னது என்ன?
Published on
Updated on
2 min read

விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மாவை இந்தியாவின் பிரபலமான ஜோடிகளில் ஒன்றாகக் கூறலாம். 2017-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட இவர்களுக்கு வாமிகா (2021) மற்றும் அகாய் (2024) என இரண்டு குழந்தைகள் உள்ளனர். தற்போது இவர்கள் லண்டனில் வசித்து வருகின்றனர்.

இந்தியாவில் தங்களுக்குக் கிடைக்கும் அளவுக்கு அதிகமான புகழ் மற்றும் எந்நேரமும் துரத்தும் கேமரா கண்காணிப்பிலிருந்து விலகி, அமைதியான வாழ்க்கையை வாழவே இவர்கள் லண்டனைத் தேர்வு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Virat and Anushka
Virat and Anushka

இந்நிலையில், நடிகை மாதுரி தீட்சித்தின் கணவர் டாக்டர் ஸ்ரீராம் நெனே, விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மாவுடனான தனது உரையாடல் குறித்துப் பகிர்ந்துள்ள தகவல்கள் இணையத்தில் பரவி வருகின்றன.

யூடியூபர் ரன்வீர் அல்லாபாதியாவின் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட டாக்டர் ஸ்ரீராம் நெனே, இந்தக் கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

அவர், "எனக்கு விராட் மீது மிகுந்த மரியாதை உண்டு. பலமுறை அவரைச் சந்தித்திருக்கிறேன். அவர் மிகவும் எளிமையான, நல்ல மனிதர். ஒருநாள் அனுஷ்காவிடம் பேசும்போது, மிகவும் சுவாரஸ்யமான ஒரு விஷயத்தை அவர் பகிர்ந்தார். 'இந்தியாவில் எங்களால் எங்களது வெற்றியை நிம்மதியாக அனுபவிக்க முடியவில்லை' என்பதால், லண்டனுக்கு மாறுவது குறித்து யோசிப்பதாகக் கூறினார்.

Madhuri Dixit and Sriram Nene
Madhuri Dixit and Sriram Nene

மேலும் தொடர்ந்து பேசிய ஸ்ரீராம் நெனே, "அவர்கள் எதிர்கொள்ளும் சூழ்நிலையை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. அவர்கள் என்ன செய்தாலும் அது மிகப்பெரிய கவனத்தைப் பெற்றுவிடுகிறது. பொது இடங்களில் உணவருந்தச் செல்லும்போது, ரசிகர்களின் அன்பு எல்லை கடந்து, சில நேரங்களில் தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிடுவதாக மாறிவிடுகிறது. விராட் - அனுஷ்கா இருவருமே தங்களது குழந்தைகளைச் சாதாரண மனிதர்களாகவும், சுதந்திரமாகவும் வளர்க்கவே விரும்புகிறார்கள்" எனக் கூறியுள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகை மாதுரி தீட்சித், 1999-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட பிறகு, தனது கணவர் ஸ்ரீராம் நெனேவுடன் அமெரிக்காவுக்குச் சென்றார். டென்வர் நகரில் வசித்து வந்த அவர்கள், 2011-ம் ஆண்டு இந்தியாவுக்குத் திரும்பினர்.

இந்திய பிரபலங்களின் வெளிநாட்டு வாழ்க்கை குறித்து பேசிய ஸ்ரீராம் நெனே, "அமெரிக்காவில் நமக்கு முழுமையான சுதந்திரமும், அடையாளத்தை மறைத்து சாதாரண மனிதராக வாழும் அமைதியும் கிடைக்கும். இந்தியாவில் கலாச்சாரப் பிணைப்பும், உறவுகளும் அதிகம் என்றாலும், அந்த 'யாரென்று யாருக்கும் தெரியாத' (Anonymity) வாழ்க்கை அமைவது கடினம். எனது மனைவியும் ரசிகர்களிடம் மிகவும் அன்பாக நடந்துகொள்பவர்தான். ஆனால், சில நேரங்களில் சாதாரண வாழ்க்கையை நாங்களும் விரும்புவோம்" எனக் கூறியுள்ளார்.

விராட் - அனுஷ்கா குறித்து ஸ்ரீராம் நெனே சொன்னது என்ன?
வைபவ் முதல் வாஷிங்டன் வரை... புதிய T20 அணி அறிவிப்பு! நிராகரிக்கப்பட்ட RCB வீரரின் உருக்கமான போஸ்ட்!

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com