2024 பாராலிம்பிக்கில் நிச்சயம் தங்கம் வெல்வேன்: தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு நம்பிக்கை...

டோக்கியோ பாராலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்த தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு, அடுத்த 2024 பாராலிம்பிக்கில் நிச்சயம் தங்கம் வெல்வேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
2024 பாராலிம்பிக்கில் நிச்சயம் தங்கம் வெல்வேன்: தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு நம்பிக்கை...
Published on
Updated on
1 min read

டோக்கியோ பாராலிம்பிக்கில், உயரம் தாண்டுதலில் வெள்ளிப்பதக்கம் வென்று, தமிழகம் திரும்பிய மாரியப்பன் தங்கவேலுவிற்கு, சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கடந்த ரியோ பாராலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற மாரியப்பன் மாரியப்பன் தங்கவேலு, தொடர்ந்து டோக்கியோ பாராலிம்பிக்கிலும் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

இந்த நிலையில், பதக்கம் வென்று தமிழக திரும்பிய மாரியப்பன் தங்கவேலுவுக்கு, சென்னை விமான நிலையத்தில், தமிழக பாராலிம்பிக் சங்கத்தின் சார்பில் மாலை அணிவித்து சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாரியப்பன் தங்கவேலு, அடுத்த 2024 பாராலிம்பிக்கில் நிச்சயம் தங்கப்பதக்கம் வெல்வேன் என நம்பிக்கை தெரிவித்தார்.

தன்னுடைய பயிற்சியாளர் மற்றும் உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்த அவர், கடந்த 2016-ல் தங்கம் வென்ற தனக்கு அரசுப்பணி வழங்கவில்லை என்றும், இந்த முறை அரசுப்பணி வழங்குமாறு தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ள நிலையில், நிச்சயம் தமிழக முதலமைச்சர் வழங்குவார் என்று நம்புவதாகவும் தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com