உலக கோப்பை வில்வித்தை...!  2 தங்கம் வென்று இந்தியா சாதனை...!!

உலக கோப்பை வில்வித்தை...!  2 தங்கம் வென்று இந்தியா சாதனை...!!
Published on
Updated on
1 min read

உலக கோப்பை வில்வித்தை போட்டியில் இந்திய வீராங்கனைகள் 2 தங்கப்பதக்கங்களை வென்று  சாதனை படைத்துள்ளனர். 

உலகக் கோப்பை வில்வித்தை போட்டி துருக்கியில் உள்ள அண்டால்யா நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்தியாவும் சீனாவும் மோதின. இதில் இந்தியாவின் ஜோதி சுரேகா வென்னம்- ஒஜாஸ் தியோதால் இணை 159-154 என்ற புள்ளி கணக்கில் சீன தைபேயின் சென் யி ஹூன்- சென் ஷிக் லுன் ஜோடியை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தனதாக்கியது. 

இதேபோல் தனிநபர் பிரிவு இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை ஜோதி சுரேகா வென்னம் முன்னாள் உலக சாம்பியனான கொலம்பியாவை சோ்ந்த சாரா லோபெஸ்சை  வீழ்த்தி முதல்முறையாக தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com