உலகக் கோப்பை: இந்தியா -பாகிஸ்தான் போட்டி தேதி மாற்றம்!

உலகக் கோப்பை: இந்தியா -பாகிஸ்தான் போட்டி தேதி மாற்றம்!

உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் அக்டோபர் 14ம் தேதி நடைபெற உள்ளதாக இந்திய கிாிக்கெட் வாாியம் தொிவித்துள்ளது. 

50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அட்டவணை ஏற்கனவே வெளியானது. இதில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி அக்டோபர் 15ம் தேதி குஜராத்தின் ஆகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடத்த திட்டமிடப் பட்டிருந்தது. அன்றைய தினம் நவராத்திரி கொண்டாட்டம் துவங்குவதால் பாதுகாப்பு காரணங்களுக்காக போட்டி தேதியை மாற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில், போட்டியை ஒரு நாள் முன்னதாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com