விவாகரத்து.. மன அழுத்தம்.. மதுப்பழக்கம்! 26 நாட்கள் மறுவாழ்வு மையம் - மனம் திறந்து பேசிய யுஸ்வேந்திர சாஹல்!

தனது தனிப்பட்ட வாழ்க்கையை இன்னும் முதிர்ச்சியுடன் புரிந்துகொண்டு, உணர்ச்சிகளை சிறப்பாக நிர்வகிக்க உதவியதாகவும் அவர் அந்த பாட்கேஸ்டில் பேசியிருனார்.
Yuzvendra Chahal latest interview
Yuzvendra Chahal latest interview
Published on: 
Updated on: 
1 min read

இந்திய சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல், மதுப்பழக்கம் மற்றும் பதட்டத் தாக்குதல்களால் (Panic attack) தான் பட்ட கஷ்டங்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். தனது வாழ்வில் திருமண முறிவு ஏற்பட்டதற்கு பிறகும், தனிப்பட்ட வாழ்க்கை குறித்த விமர்சனங்களாலும் தனது மனநலம் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்ததையும், அது எவ்வாறு தன்னை பாதித்தன என்பது குறித்தும் அவர் வெளிப்படையாக பேசியுள்ளார்.

யுஸ்வேந்திர சாஹல், யூடியூபருமான தனஸ்ரீ வர்மாவை 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் குருகிராமில் நெருக்கமான உறவினர்கள் muமுன்னிலையில் திருமணம் செய்துகொண்டார்.

தனஸ்ரீ வர்மா நடன இயக்குநர் என்பதால் அவ்வப்போது கணவரான யுஸ்வேந்திர சாஹலுடன் நடனமாடியும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வந்தார். அதன் பின்னர் இவருக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 2022 ஜூன் மாதம் முதல் தனித்தனியாக வாழத் தொடங்கினர். அதன் பின்னர், 2025 மார்ச் மாதம் மும்பையின் பாந்த்ரா குடும்ப நீதிமன்றம் அவர்களுக்கு பரஸ்பர சம்மதத்தின் பேரில் விவாகரத்து வழங்கியது.

சமீபத்தில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ராவின் 'பைத் & போல்' பாட்காஸ்டில் பேசிய 36 வயதான சஹால், ஐபிஎல்-லில் தனது ஆரம்பகால ஆண்டுகளில் குடிப்பழக்கம் என்பது ஒரு சமூக நடவடிக்கையாகத் தொடங்கியதாகவும், ஆனால், விவாகரத்திற்குப் பிறகு அதைக் கையாள்வது கடினமாக மாறியது எப்படி? என்பதைப் பற்றியும் அவர் அதில் பேசியுள்ளார். விவாகத்தில் இருந்து வெளிவர முயன்று அவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளதை ஒப்புக்கொண்டுள்ளார்.

அதன் பின்னர், ஒரு மறுவாழ்வு மையத்தில் 26 நாட்கள் தங்கியிருந்தது, தனது உணர்ச்சிகளைச் சிறப்பாகக் கையாளவும், தன் வாழ்க்கையின் கட்டுப்பாட்டை மீண்டும் பெறவும் உதவியதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், அவர் தனது தனிப்பட்ட வாழ்க்கையை இன்னும் முதிர்ச்சியுடன் புரிந்துகொண்டு, உணர்ச்சிகளை சிறப்பாக நிர்வகிக்க உதவியதாகவும் அவர் அந்த பாட்கேஸ்டில் பேசியிருனார்.

தொடர்ந்து பேசிய அவர், "மதுவை விட்டு விலகினால், நல்ல விஷயங்கள் நடக்கும் என்பதை நான் உணர்ந்து கொண்டேன்," என்று அவர் மேலும் கூறினார். ​​தனது தனிப்பட்ட வாழ்க்கையை, குறிப்பாக விவாகரத்துக்குப் பிறகு, கையாண்ட விதம் என்பது இன்னும் சிறப்பாகக் கையாளப்பட்டிருக்கலாம் என்பதை சஹால் எந்த ஒரு தயக்கமுமின்றி ஒப்புக்கொண்டுள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com