தென்மேற்குப்பருவமழை தீவிரமடைந்துள்ளது

தென்மேற்குப்பருவமழை தீவிரமடைந்துள்ளது

தமிழகத்தில் இன்றும் நாளையும் நீலகிரி, கோவை மாவட்ட மழை பகுதியில் ஒரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு.
Published on

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை ஜூன் ஒன்றாம் தேதி தொடங்கியது. இந்த நிலையில் தற்போது

தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்து வருகிறது.

தென் மேற்கு பவருமழை தொடங்கி ஒரு மாதத்திலேயே 115 சதவீதம் மழை பதிவாகி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக, தென்மேற்கு பருவமழை தமிழகம் புதுவையில் கடந்த ஜூன் ஒன்றாம் தேதியிலிருந்து இன்று வரையிலும் 109.2 மி.மீட்டர் மழை பாதிவாகி உள்ளது. இந்த காலகட்டத்தில் இயல்பாகப் பதிவாக கூடிய மழையின் அளவு 50.8 மி.மீட்டர் மழையாகும்.

ஆனால் தற்போது பதிவாகி இருக்கக்கூடிய மழை என்பது இயல்பிலிருந்து 115 சதவீதம் மழை பதிவாகி இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்றும் நாளையும் நீலகிரி, கோவை மாவட்ட மழை பகுதியில் ஒரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு.

2ஆம் தேதியில் இருந்து 6 ஆம் தேதி வரை தமிழகம் புதுவை காரைக்காலில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு.

சென்னை மற்றும் புறநகர் சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com