இலங்கையில் இருந்து நாகப்பட்டினம் மீனவர்கள் 12 பேர் விடுதலை...!!!

இலங்கையில் இருந்து நாகப்பட்டினம் மீனவர்கள் 12 பேர் விடுதலை...!!!

இலங்கை கடற்படையால் சிறைப் பிடிக்கப்பட்ட நாகப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் 12 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.  நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை பகுதியை சேர்ந்த வேல்மயில் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில், அக்கரைபேட்டை மற்றும் கீச்சாங்குப்பம் பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் 12 பேர், கடந்த 12-ஆம் தேதி கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.  நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்தது.  

இந்நிலையில், தமிழ்நாட்டை சேர்ந்த மீனவர்கள் 12 பேரையும் பருத்தித்துறை நீதிமன்ற நீதிபதி பொன்னுத்துரை கிரிசாந்தன் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளார். ஆனால் அவர்களது பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com