தஞ்சாவூர் | பாபநாசம் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதிதுறை நடுவர் நீதிமன்றத்தில் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதிதுறை நடுவர் திரு A.அப்துல்கனி BA,BL அவர்கள் தலைமையில் பாபநாசம் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதிதுறை நடுவர் நீதிமன்ற வளாகத்தில் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
இந்த மக்கள் நீதிமன்றத்தில் 180 வழக்குகளுக்கு தீர்வுகாணபட்டு ரூபாய் 22,40,000 (இருபத்து இரண்டு லட்சத்து நாற்பதாயிரம் ரூபாய்) க்கு தீர்வு காணபட்டது.
மேலும் இன்றைய மக்கள் நீதிமன்றத்தில் குடும்ப நல வழக்குகள் தொடர்பாக இரு வெவ்வேறு வழக்குகளில் பிரிந்து வாழ்ந்து வந்த கணவன் மனைவியினர் சேர்த்துவைக்கபட்டு இரண்டு வழக்குகளுக்கு தீர்வு காணபட்டது.