75வது சுதந்திர தினம்.. தேசியக் கொடி ஏற்றி தேசப்பற்றை வெளிப்படுத்திய ரஜினிகாந்த்!!

75வது சுதந்திர தினம்.. தேசியக் கொடி ஏற்றி தேசப்பற்றை வெளிப்படுத்திய ரஜினிகாந்த்!!

சுதந்திரதின அமுதப் பெருவிழாவை முன்னிட்டு, இன்று முதல் அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடி ஏற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி விடுத்த வேண்டுகோளை ஏற்று, நடிகர் ரஜினிகாந்த், சென்னையில் உள்ள போயஸ் கார்டன் இல்லம் முன்பு தேசியக்கொடி ஏற்றி உள்ளார்.

நாட்டின் 75வது சுதந்திர தினம் பிரதமர் மோடி வேண்டுகோள்

நாட்டின் 75வது சுதந்திர தின அமுதப் பெருவிழா நாடு முழுவதும் வெகுசிறப்பாக கொண்டாடப்படவுள்ளது. இதனையொட்டி, இந்திய சுதந்திரத்தையும், அதற்காக பாடுபட்ட சுதந்திரப் போராட்டத் தியாகிகளையும் நினைவில் கொள்ளும் விதமாக இன்று முதல் வரும் 15ம் தேதி வரை அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடி ஏற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார்.

தமிழக அரசு அறிவுறுத்தல்

அதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடியை ஏற்றி சுதந்திரதின விழாவை கொண்டாட தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இதேபோல், அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், தனியார் நிறுவன கட்டடங்களின் முகப்பில் முழு மரியாதையுடன் தேசியக் கொடி ஏற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேசியக் கொடி ஏற்ற தயாராகும் மக்கள்

இதற்கான ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ள நிலையில்,  தமிழகம் முழுவதும் இன்று முதல் 3 நாட்கள் அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடியை ஏற்றி சுதந்திர தின விழாவை கொண்டாட பொதுமக்கள் தயாராகி வருகின்றனர்.

தேசியக் கொடி ஏற்றிய நடிகர் ரஜினிகாந்த்

இதனிடையே, ஒருநாள் முன்பாகவே சென்னையில் உள்ள தனது போயஸ் கார்டன் இல்லத்தில், நடிகர் ரஜினிகாந்த்  தேசிய கொடியை ஏற்றி உள்ளார். இதன்மூலம், அனைவருக்கும் முன்னுதாரணமாக அவர் தேசப்பற்றை வெளிப்படுத்தியுள்ளார்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com