சீமான் மீது வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக வழக்கு பதிவு..

சீமான் மீது வன்முறையை தூண்டும் வகையில்  பேசியதாக வழக்கு பதிவு..

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வன்முறையை தூண்டும் வகையில் பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் திருச்சி கட்டோண்மென்ட் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

திருச்சியில் உள்ள வெளிநாட்டவருக்கான சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட 
ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், சாந்தன்,
முருகன் உள்ளிட்ட நான்கு தமிழர்களை உடனடியாக விடுதலை செய்யக்கோரி,
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் திருச்சி ஜங்ஷன் அருகே நேற்று முன்தினம் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அந்த ஆர்ப்பாட்டத்தில் வன்முறையை தூண்டும் வகையிலும் அவதூறாக பேசியதாக 
சீமான் மீது இந்திய தண்டனைச் சட்டம்
iPC 143 சட்ட விரோதமாக கூடுதல்,
153 கலகம் செய்ய தூண்டுதல்,
504, அமைதியை சீர் குலைத்தல்,
506 (I) கொலை மிரட்டல்,
City Police act
41 (6) ஆகிய 5 பிரிவுகளின் கீழ்
சீமான் மற்றும் 500 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறிப்பு: 24 ஆம் தேதி இரவு சீமான் பேசிய வீடியோ லைவ் கிட்டில் அனுப்பப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com