மாணவி குளிப்பதை செல்போனில் வீடியோ பதிவு செய்த நபரை போக்சோவில் கைது.....

மாணவி குளிப்பதை செல்போனில் வீடியோ பதிவு செய்த நபரை போக்சோவில் கைது.....

செல்போனில் வீடியோ

சென்னை வடபழனி பகுதியை சேர்ந்த தம்பதியரின் இரண்டாவது மகள், பொது குளியலறையில் குளித்து கொண்டிருந்த போது, அருகில் இருந்த கழிவறை வழியாக, செல்போனில் நபர் ஒருவர் வீடியோ எடுப்பதை பார்த்த மாணவி, பயந்து நடுநடுங்கி பெற்றோரிடம் நடந்ததை கூறியுள்ளார்.

மகளிர் காவல் நிலையத்தில் புகார்

இது குறித்து, பெற்றோர் வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், அவரது வீட்டில் அருகே வசித்து வந்த 37 வயதான வினோத்குமார் என்பவனை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்த போது, அவரின் செல்போனில் இளைய மகள் குளிப்பது மட்டுமல்ல அவர்களின் மூத்த மகள் குளிக்கும் வீடியோ இருப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

போக்சோ சட்டப்பிரிவில் கைது 

இந்நிலையில், சென்னை மாநகராட்சி 11-வது மண்டலத்தில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வரும் வினோத்குமார் மீது போஸ்கோ சட்டப்பிரிவில் வழக்கு பதிவு செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்...

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com