கரை ஒதுங்கிய அரிய வகை கடல் ஆமை..!

கரை ஒதுங்கிய அரிய வகை கடல் ஆமை..!
Published on
Updated on
1 min read

நெல்லை மாவட்டம் உவரி அருகே உள்ள கூட்டப்பனை கடற்கரை கிராமத்தில் பஞ்சல் ஆமை என அழைக்கப்படும் அரிய வகை ஆலிவ் ரெட்லி வகையை சேர்ந்த கடல் ஆமை முட்டையிட்டு குஞ்சு பொரிக்க கரை ஒதுங்கியது.

கரை ஒதுங்கிய ஆமை மணல் பரப்பில் ஆழக்குழி தோண்டி அதில் நூற்றுக்கும் மேலான முட்டைகளை இட்டு மணலை மூடி பாதுகாப்பாக வைத்தது. இதனைக் கண்ட அப்பகுதி மீனவர்கள் நெல்லை வனச்சரக அலுவலகத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.

கூட்டப்பனை கடற்கரைக்கு வந்த வனச்சரக அலுவலர் மணிகண்டன் முன்னிலையில் முட்டையிட வந்த கடல் ஆமையை பத்திரமாக மீனவர்கள் கடலுக்குள் விட்டனர்.

பின்னர் அலையின் வேகத்தில் முட்டைகள் அடித்துச் செல்லப்பட்டு முட்டைகள் வீணாகி விடக்  கூடாது என்பதை கருத்தில் கொண்டு ஆமை மண்ணில் புதைத்த நூற்றுக்கும் மேற்பட்ட முட்டைகளை வனச்சரக அலுவலர் முன்னிலையில் பத்திரமாக மீட்டு நாய், பூனை போன்ற வீட்டு விலங்குகள் அண்டாத இடத்தை தேர்வு பாதுகாப்பான சூழலில் மண்ணில் புதைக்கப்பட்டன.

45 நாட்களில் இருந்து 55 நாட்களுக்குள் முட்டைகள் குஞ்சு பொரித்து ஆமை குஞ்சுகள் வெளியே வரும்போது அவைகள் அனைத்தும் மீண்டும்  பத்திரமாக கடலுக்குள் விடப்படும் என வனச்சரக அலுவலகர் தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com