
சேலம் மாநகர தனியார் பேருந்தில் சிறுவன் நடத்துனராக வேலை செய்யும் வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சேலம் மாநகரில் பழைய பேருந்து நிலையம் முதல் ஏற்காடு அடிவாரம் வரை குமரன் என்ற தனியார் பேருந்து இயங்கி வருகிறது. இந்த பேருந்தில், சிறுவன் ஒருவன் பேருந்து நடத்துனராக டிக்கெட் வழங்குவதும், பயணிகளை ஏற்றுவதும், விசில் அடிப்பதும் போன்ற பணிகளை செய்து வருகிறார். சிறுவர்களை வேலைக்கு அமர்த்தக் கூடாது என்று சட்டம் இருந்தும் இதுபோன்று செயலில் ஈடுபடும் பேருந்து நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.