மயிலாடுதுறையில் மின்கம்பத்தில் மோதி விபத்து: இளைஞர் பலி

மின்கம்பத்தில் மோதி உயிரிழந்த இளைஞரைக் கண்டு குடும்பத்தினர் கதறி அழும் வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாகியுள்ளது.
மயிலாடுதுறையில் மின்கம்பத்தில் மோதி விபத்து: இளைஞர் பலி

மயிலாடுதுறையில் மின்கம்பத்தில் மோதி உயிரிழந்த இளைஞரைக் கண்டு குடும்பத்தினர் கதறி அழும் வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாகியுள்ளது. ஆறுபாதி கிராமத்தைச் சேர்ந்த மணிவண்ணன் என்பவர் தனது நண்பரின் பிறந்தநாள் விழாவிற்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய போது காவல் நிலையம் அருகே மின்கம்பத்தில் மோதிய விபத்தில் படு காயமடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மணிவண்ணனை மீட்ட போலீசார் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். முன்னதாக வெகு நேரமாக ஆம்புலன்ஸ் வரவில்லை என்றும் போலீசார் உதவ முன்வரவில்லை எனவும் மணிவண்ணன் குடும்பத்தினர் குற்றஞ்சாட்டினர்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com