அதிமுகவில் இணைந்த அமமுக மாவட்ட பொருளாளர்...!!

அதிமுகவில் இணைந்த அமமுக மாவட்ட பொருளாளர்...!!

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொருளாளரும் திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளர் மண்டல பொறுப்பாளருமான திருச்சி ஆர் மனோகரன் கட்சியில் இருந்து விலகி கழக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி முன்னிலையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களை சென்னை பசுமைவழிச் சாலை இல்லத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொருளாளரும் திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளரும் மண்டல பொறுப்பாளரும் முன்னாள் அரசு கொறடாவுமான திருச்சி ஆர் மனோகரன் அக்கட்சியில் இருந்து விலகி கழகப் பொதுச் செயலாளர் முன்னிலையில் தன்னை  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைத்துக் கொண்டார்.

அவருடன் திருச்சி மாவட்ட அம்மா பேரவை செயலாளர் வழக்கறிஞர் தினேஷ்குமார் மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் அப்துல் ரகுமான் அந்தநல்லூர் ஒன்றிய கழக செயலாளர் சாத்தனூர் பி வாசு உள்ளிட்ட நிர்வாகிகள் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திலிருந்து இருந்து விலகி கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் முன்னிலையில் தங்களை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com