மூவர்ண விளக்குகளில் ஜொலிக்கும் சென்னை விமான நிலையம்!!

மூவர்ண விளக்குகளில் ஜொலிக்கும் சென்னை விமான நிலையம்!!

சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை விமான நிலையம் மூவா்ண விளக்குகளால் அலங்காிக்கப்பட்டு ஜொலித்து வருகிறது

76-வது சுதந்திர தினவிழா நாளை நாடு முழுவதும் கொண்டாடப்படவுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. காவல்துறையினா் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளனா்.

இந்நிலையில் சென்னை உள்நாட்டு முனையம் மற்றும் பன்னாட்டு விமான நிலையம் முழுவதும் மூவா்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்து வருகிறது. இதனை பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசித்து செல்கின்றனா். மேலும் அவா்கள் செல்போன்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோ எடுத்து மகிழ்ந்து வருகின்றனர். அங்கு எந்த ஒரு அசம்பாவிதமும் ஏற்படாத வகையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நேப்பியா் மேம்பாலமும் மூவா்ண மின் விளக்குகளால் அலங்காிக்கப்பட்டுள்ளது. 

இதேபோல் டெல்லியில் அமைந்துள்ள ரயில் பவன் சுதந்திர தினவிழாவையொட்டி மூவா்ண மின் விளக்குகளால் அலங்காிக்கப்பட்டு ஜொலித்து வருகிறது. மேலும் கிருஷி பவன் உள்ளிட்ட பல்வேறு முக்கிய இடங்கள் மூவர்ண மின் விளக்குகளால் அலங்காிக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் கண்டு ரசித்து வருகின்றனா்.

மேலும் மேற்கு வங்க மாநிலம் அசன்சோல் ரயில் நிலையம் மூன்று வண்ண விளக்குகளால் அலங்காிக்கப்பட்டு ஜொலித்து வருகிறது. இதேபொல் நாடு முழுவதும் உள்ள பல்வேறு முக்கிய இடங்களிலும் மூவா்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. 

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com