அரசு இடங்களை ஆக்கிரமித்துள்ள அனைவரும் தாமாக முன்வந்து அரசுக்கு விட்டுக் கொடுக்க வேண்டும்: துரைமுருகன்

அரசு இடங்களை ஆக்கிரமித்துள்ளவர்கள் தாமாக முன்வந்து அரசுக்கு விட்டுக் கொடுக்க வேண்டும் என நீர் வளத்துறை அமைச்சர்  துரைமுருகன் தெரிவித்துள்ளார்  
அரசு இடங்களை ஆக்கிரமித்துள்ள அனைவரும் தாமாக முன்வந்து அரசுக்கு விட்டுக் கொடுக்க வேண்டும்: துரைமுருகன்
Published on
Updated on
1 min read

வேலூர் மாவட்டம் காட்பாடியில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்குகொரோனா  நிவாரண நிதி இரண்டாம் தவணையாக ரூ.2000 வழங்கும் திட்டம் மற்றும் 14 வகையான சிறப்பு நிவாரண மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பினை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்  பொதுமக்களுக்கு வழங்கினர்.

 பின்னர் விழாவில் பேசிய அமைச்சர் துரைமுருகன், தமிழக அரசு எடுத்து வரும் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளால் தமிழகத்தில் கொரானா வைரஸ் தொற்று காட்டுக்குள் வந்திருப்பதாகவும்,வைரஸ் தொற்று பரவாமல் இருக்க பொதுமக்களும் அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

 மேலும் அரசு நிலங்களை யாரும் ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது என்று கூறிய அவர்,நிலங்களை ஆக்கிரமிப்பு செய்திருந்தாலும் அரசு கேட்கும் பட்சத்தில் ஆக்கிரமிப்பு செய்த இடத்தை விட்டுக் கொடுக்க வேண்டும் என கூறினார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com