சாதனை விளக்க பொதுக் கூட்டம்: வேலூர் வரும் மத்திய மந்திரி

சாதனை விளக்க பொதுக் கூட்டம்: வேலூர் வரும் மத்திய மந்திரி

வேலூர்: ஜூன் 8ல், வேலூரில் நடக்கவுள்ள மத்திய அரசின் சாதனை விளக்க பொதுக் கூட்டத்தில் பங்கேற்க்க மத்திய மந்திரி அமித்ஷா தமிழகம் வருகிறார்.

பா.ஜ.க, ஆட்சி பொறுப்பேற்று 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், மத்திய அரசின் 9 ஆண்டுகால சாதனைகளை விளக்கி, கடந்த மாதம் 30ம் தேதி முதல் வருகின்ற 30ம் தேதி வரை,ஒரு மாத காலம், நாடு முழுவதும் பொதுக் கூட்டங்கள் நடத்தும்படி, ப.ஜ.க தலைமை, அக்கட்சி  நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

இதன் அடிப்படையில் தமிழ் நாட்டில், முதல் சாதனை விளக்க பொதுக்கூட்டம் சில நாட்களுக்கு முன்பு மதுரையில் நடந்து முடிந்தது. தற்போது இரண்டாவ்து கூட்டத்தை, வருகின்ற 8ம் தேதி வேலூரில் நடத்த திட்டமிடப்பட்டடுள்ளது. 

இப்பொதுக்கூட்டத்தில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை மற்றும் விமானப் போக்குவரத்துறை இணை மந்திரி வி.கே. சிங் பங்கேற்க்கவுள்ளனர். 

இதையொட்டி, வேலூரில் சாதனை விளக்க பொதுக் கூட்டத்திற்க்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com