அரசியல் ஸ்டண்டுக்காக அண்ணாமலை எதையோ கூறி வருகிறார்....!!

அரசியல் ஸ்டண்டுக்காக அண்ணாமலை எதையோ கூறி வருகிறார்....!!

அரசியல் ஸ்டண்டுக்காக அண்ணாமலை எதையோ கூறி வருகிறார் என அமைச்சர் துரைமுருகன் விமர்சித்துள்ளார். 

அம்பேத்கரின்  133-வது பிறந்த நாளை ஒட்டி, வேலூர் மாவட்டம் விருதம்பட்டு பகுதியில், உள்ள அம்பேத்கர் சிலைக்கு தி.மு.க. பொதுச் செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரை முருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.  பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.  அப்போது செய்தியாளர்கள், அண்ணாமலை வெளியிட்ட ஊழில் பட்டியல் குறித்து கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அவர், அரசியல் ஸ்டண்டுக்காக அண்ணாமலை எதையோ கூறி வருகிறார் என்று கோபமாக பதிலளித்தார்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com