"சீமான் எந்த தொகுதியில் நின்றாலும் தோற்பது உறுதி" அண்ணாமலை பேச்சு!!

"சீமான் எந்த தொகுதியில் நின்றாலும் தோற்பது உறுதி" அண்ணாமலை பேச்சு!!

சீமான் எந்த தொகுதியில் நின்றாலும் தோற்பது உறுதி என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

கோவை பேரூர் பகுதியில் நடைபெறும் நொய்யல் திருவிழாவின் 5ம் நாள் நிகழ்வில்  கலந்து கொண்டு காவடி எடுத்து நடனமாடியுள்ளார்.  பின்னர் நொய்யல் ஆராத்தி வழிபாட்டில் கலந்து கொண்டார். 

இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், உக்ரைன் ரஷ்யா போருக்குப் பிறகு உலக நாடுகளில் 200 சதவீத அளவுக்கு எரிவாயு உருளையின் விலை உயர்ந்த போதிலும் இந்தியாவில் உயராமல் மத்திய அரசு கட்டுப்படுத்தியதாக பேசியுள்ளார். தேர்தலுக்கனான சிலிண்டரை் விலை குறைக்கப்படவில்லை என்றும் அண்ணாமலை கூறியுள்ளார்.

காவிரியில் தண்ணீர் திறந்து விட மறுப்பதன் மூலம் இந்திய அரசியலமைப்பு சட்டத்தையே கர்நாடகா அரசு கேள்விக்குறியாக்குவதாக கூறியுள்ளார். சீமான் எங்கு  போட்டியிட்டாலும்  தோற்பது உறுதி என்று கூறிய அண்ணாமலை, திமுகவில் இருக்கும் ஊழல்வாதிகளை எதிர்த்து சீமான் போட்டியிடலாமே என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com