மீண்டும் புகையிலை பொருட்களுக்கு தடை....!!!

மீண்டும் புகையிலை பொருட்களுக்கு தடை....!!!

தமிழ்நாட்டில் குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் உள்ளிட்டவைக்கு மேலும் ஒரு ஆண்டு காலத்திற்கு தடை விதிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது. 

நிக்கோடின் மற்றும் புகையிலை அடிப்படையிலான பான்மசாலா உள்ளிட்ட புகைப் பொருட்கள் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கக் கூடியவை என்பதால் அவற்றை தமிழகத்தில் தயாரிக்கவும், விற்பனை செய்யவும் கடந்த 2011-ம் ஆண்டு  தடை விதிக்கப்பட்டது.  ஒவ்வொரு ஆண்டும் தடை முடிவடையும் நாளில் இருந்து அடுத்த ஆண்டுக்கு  புதிதாக தடை விதிக்கப்படுகிறது.

இந்த நிலையில் குட்கா மற்றும் புகையிலைப்  பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த  தடை நேற்று மே 23-ம் தேதியோடு முடிவடைந்தது.  இதையடுத்து  தமிழகத்தில் குட்கா, பான் மசாலா, புகையிலை பொருட்களுக்கு மேலும் ஓராண்டுக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.   இதன்மூலம் மேலும் ஓராண்டு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com