காவிரி டெல்டா போராட்டக் களமாக மாற வேண்டுமா..? பி.ஆர்.பாண்டியன் எச்சரிக்கை...

காவிரி டெல்டாவில் குருவை கருக தொடங்கியதற்கும், சம்பா துவங்க முடியாத நிலை ஏற்பட்டதற்கும் காவிரி மேலாண்மை ஆணையமே பொறுப்பு ஏற்கவேண்டும் என பிஆர் பாண்டியன் வலியுறுத்தி உள்ளார்.
காவிரி டெல்டா போராட்டக் களமாக மாற வேண்டுமா..? பி.ஆர்.பாண்டியன் எச்சரிக்கை...

தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஒன்றியத்தில் குறுவை பயிர்கள் தண்ணீரின்றி கருகி வருவதை நேரில் பார்வையிட்டார்.

பின்னர் ஆலத்தம்பாடி பகுதியில் கருகும் பயிரை பார்வையிட்டு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்,  காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு உரிய அழுத்தத்தைக் கொடுத்து தண்ணீரை பெறுவதற்கான முயற்சியை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும், இல்லையென்றால், காவிரி டெல்டா போராட்டக் களமாக மாறும் என எச்சரிப்பதாகவும்  தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com