2011க்கு முன் கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு...தெளிவுபடுத்திய நீதிமன்றம்!

2011க்கு முன் கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு...தெளிவுபடுத்திய நீதிமன்றம்!

கடந்த 2011ஆம் ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட பள்ளி கட்டிடங்களுக்கு மீண்டும் திட்ட அனுமதி கோரி புதிதாக விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

நடப்பு கல்வியாண்டிற்கு அங்கீகாரம் கோரியோ, அங்கீகாரத்தை புதுப்பிக்க கோரியோ விண்ணப்பிக்கும் போது பள்ளி கட்டிடத்திற்கான ஒப்புதல் சான்றை இணைக்க வேண்டும் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

இதை எதிர்த்து தனியார் பள்ளிகள் சங்கங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், 2011ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதிக்கு முன் கட்டப்பட்ட பள்ளிக்கட்டிடங்களுக்கு மீண்டும் கட்டிட அனுமதியோ, திட்ட அனுமதியோ பெறுவது கட்டாயமில்லை என உத்தரவிட்டார். 

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com