என்னது ஹெல்மெட் வாங்கினால் ஒரு கிலோ தக்காளி இலவசமா...! கடைக்காரரின் புதிய முயற்சி...!

என்னது ஹெல்மெட் வாங்கினால் ஒரு கிலோ தக்காளி இலவசமா...! கடைக்காரரின் புதிய முயற்சி...!

Published on

சேலத்தில் தலைகவசம் அணிவதன் அவசியத்தை உணர்த்தும் விதமாக, ஒரு ஹெல்மெட் வாங்கினால் ஒரு கிலோ தக்காளி இலவசம் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். 

தமிழ்நாட்டில் தொடர் மழையின் காரணமாக வரத்து குறைந்ததால் தக்காளியின் விலை 100 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதை சாதகமாக பயன்படுத்தி பொதுமக்களிடையே ஹெல்மெட் அணிவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், சேலம் கோட்டை பகுதியைச் சேர்ந்த ஹெல்மெட் கடை உரிமையாளர் முகமது காசிம் என்பவர், தலைகவசம் என்பது உயிர்கவசம் என்பதை வலியுறுத்தி "தலைக்கு ஹெல்மெட் முக்கியம், சமையலுக்கு தக்காளி முக்கியம்'' என சிறப்பு சலுகையை அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பில் 1 ஹெல்மெட் வாங்கினால், 1 கிலோ தக்காளி முற்றிலும் இலவசமாக வழங்கப்படும் என்றும், இச்சலுகை இன்றும், நாளையும் மட்டுமே என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த சலுகையின் முதல் விற்பனையை திரைப்பட நடிகர் பெஞ்சமின் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து, சேலத்தில் தக்காளி  150 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதால் பலரும் ஹெல்மெட்டை வாங்கிக்கொண்டு தக்காளியை இலவசமாக பெற்று செல்கின்றனர். இதுகுறித்து திரைப்பட நடிகர் பெஞ்சமின் கூறும்போது, அனைத்து இருசக்கர வாகன ஓட்டிகளும் தலைக்கவசம் அணிய வேண்டும்  என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், தலைக்கவசம் வாங்குபவர்களுக்கு 1 கிலோ தக்காளி இலவசமாக வழங்கப்பட்டு வருவது நல்ல விஷயம் என்று தெரிவித்தார்.

இந்த புதிய சலுகையால், வாகன ஓட்டிகள் தங்களது உயிரை காத்துக்கொண்டது போன்றும் ஆச்சு, அதேசமயம் 150 ரூபாய் விற்கும் தக்காளியை வீட்டிற்கு இலவசமாக வாங்கிக் செல்வது போன்றும் ஆச்சு. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com